"வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,591 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''வாணி ராணி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நெடுந்தொடர். இது நடிகை [[ராதிகா]]வின் ராடன் மீடியாவின் தயாரிப்பு ஆகும். ஜனவரி 21, 2013 முதல் ஒளிபரப்பாகிறது. ஒளிபரப்பப்படும் நேரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9.30-10.00 மணி. இதே நிறுவனத்தின் தயாரிப்பான ’செல்லமே’ தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பப்படுகிறது.
 
சித்தி, அண்ணாமலை, அரசி தொடர்களில் இரட்டை வேடத்தில் நடித்த [[ராதிகா]], நான்காவது முறையாக வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
 
==கதை சுருக்கம்==
அக்கா தங்கையான வாணி ராணி அண்ணன் தம்பிகளான சாமிநாதன் பூமிநாதனை திருமணம் செய்துகொண்டு ஒரே குடும்பத்திற்கு வாழப் போகிறார்கள். அக்கா வாணி பெரிய வழக்கறிஞராக இருக்க, தங்கை ராணியோ படிப்பு ஏறாத பெண்ணாக அதே சமயம் குடும்ப நிர்வாகத்தில் கெட்டிகாரியாகவும், அப்பாவியாகவும் இருக்கிறார்.
 
கூட்டு குடும்பமாக வாழும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், இருவருக்கும் புகுந்த வீட்டில் ஒரு சிக்கல் வருகிறது. அந்த சிக்கலால் இருவக்கும் இடையே பெரும் பிரச்சனை உருவாகி அதன் மூலம் இருவரின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து ஒரே வீட்டில், ஒரே குடும்பமாகவே வாழும், இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் வாணி ராணி மெகா தொடரின் கதை.
 
==நடிகர்கள்==
* [[ராதிகா]] சரத்குமார்
* வேணு அரவிந்த்
* பப்லு
* ரவிகுமார்
* புவனா
* அருண்
* விக்கி
* சுதீப்
* நிகிலா ராவ்
* பேபு நேஹா
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:சன் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
17,886

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1602652" இருந்து மீள்விக்கப்பட்டது