சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
அமெரிக்காவில் எல்லா சர்க்கரைப் பதிலீடுகளும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பொருட்களைப் "பாதுகாப்பானதாகப் பொதுவாக அடையாளம் காணப்பட்டவை" என்னும் தலைப்பில் பட்டியலாக வெளியிடுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட எந்தச் சர்க்கரைப் பதிலீடுகளின் அங்கீகார நிலையையும் மாற்றக்கூடிய வகையிலான அறிவியல் அடைப்படையிலான சான்றுகள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இப்பொருட்களை அனுமதிப்பது குறித்த முடிவுகளை எடுக்கும்போது, [[நச்சியல்]], [[மருத்துவம்]] ஆகியவை சார்ந்த ஆய்வுத் தகவல்கள் உள்ளிட்ட ஏராளமான விரிவான ஆய்வுத் தகவல்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
 
உணவில் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்ற பெரும்பான்மையான சர்க்கரைப் பதிலீடுகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட சேர்வைகள். ஆனாலும் சில இயற்கையான சர்க்கரைப் பதிலிடு பொருட்களும் உள்ளன. பெர்ரிகள், [[பழம்|பழங்கள்]], [[காய்கறி]]கள், [[காளான்]]கள் போன்றவற்றில் காணப்படும் [[சோர்பிட்டோல்]], [[சைலிட்டோல்]] போன்றவை இவ்வாறானவை. மேற்படி இயற்கைப் பொருட்களில் இருந்து இச் சேர்வைகளைப் பிரித்து எடுப்பது வணிக அடிப்படையில் சாத்தியமானதல்ல. இதனால், பொருத்தமான தாழ்த்து சர்க்கரைகளை வினையூக்க [[ஐதரசனேற்றம்]] செய்வதன் மூலம் இச் சர்க்கரைப் பதிலீடுகள் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இம்மொறைஇம்முறை மூலம் [[சைலோசு]] [[சைலிட்டோல்]] ஆகவும், [[லக்டோசு]] [[லக்ட்டிடோல்]] ஆகவும், [[குளுக்கோசு]] [[சோர்பிட்டோல்]] ஆகவும் மாற்றப்படுகின்றன.
 
==பயன்பாட்டுக்கான காரணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது