தியாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் தியாகம், பகவத் கீதை, தியாகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 4:
அனைத்து இல்லற இன்பங்களை துறந்தவனை [[துறவி]] என்பர். தியாகம் முக்குணத் தன்மை உடையது. [[முக்குணங்கள்]] அடிப்படையில் தியாகத்தை மூன்றாக பிரித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர், [[பகவத் கீதை|பகவத் கீதையில்]] பதினெட்டாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார்.
 
===தாமசத் தியாகம்===
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட செயலை (கர்மத்தை) முற்றிலும் துறந்துவிடுவது முறையல்ல. அவ்வாறு [[தாமச குணம்|தாமச குணத்துடன்]], மதிமயக்கத்தினால் செயலை துறப்பது தாமசத் தியாகம் ஆகும்.
 
===ராஜசத் தியாகம்===
ஒரு செயல் செய்வதால் துக்கத்தைத் தருமென்று நினைத்து, உடலை வருத்த வேண்டி இருக்குமோ என்ற பயத்தால் அந்த கருமத்தை செய்யாது விட்டால் அத்தியாகம், [[இராட்சத குணம்|இராட்சத குணத்துடன்]] தொடர்புடைய ராஜசத் தியாகம் ஆகும்.
 
===சாத்வீக தியாகம்===
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை (செயலை) தான் செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், பற்றுதலையும் கர்மத்தால் உண்டாகும் பலனையும் துறந்து செயலைச் செய்தால் அவ்வகையான தியாகம் சாத்வீக தியாகம் ஆகும். [[சத்துவ குணம்]] நிறைந்தவனும், அறிவாளியும், ஐயம் நீங்கிய தியாகியானவன், ஒரு செயலை நல்லது அல்ல என்று வெறுப்பதும் இல்லை. ஒரு செயலை நல்லது என்று அதில் நாட்டம் கொள்வதும் இல்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/தியாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது