வானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
'''வானியல்''' (''Astronomy'') என்பது விண்பொருட்கள் (அதாவது [[இயற்கைத் துணைக்கோள்]]கள், [[கோள்]]கள், [[விண்மீன்]]கள், [[நெபுலா|விண்முகில்]]கள் மற்றும் [[விண்மீன் பேரடை]]கள்) பற்றியும், அவற்றின் [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[கணிதம்]] மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு]], [[காமா கதிர் வெடிப்பு]], விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) [[அவதானிப்பு வானியல்|அவதானிப்பதிலும்]], விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான [[அண்டவியல்]] என்பது [[அண்டம்|அண்ட]]த்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும்.<ref>{{cite book|last=Unsöld|year=2001|coauthors=Baschek|page=1|chapter=Introduction}}</ref>
 
வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பாபிலோனிய, கிரேக்க, இந்திய, இரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு [[தொலைநோக்கி]]யின் கண்டுபிடிப்பு இன்றியமையாகவிருந்ததுஇன்றியமையாததாகவிருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் [[நாட்காட்டி]] தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், [[வானியற்பியல்|வானியற்பியலுடன்]] தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது [[வானியற்பியல்|வானியற்பிய]]லையே குறிக்கிறது.<ref>{{cite book|last=Unsöld|year=2001|coauthors=Baschek|pages=6–9|chapter=I. Classical Astronomy and the Solar System}}</ref>
 
20-ஆம் நூற்றாண்டில், வானியல் [[அவதானிப்பு வானியல்]] மற்றும் கருத்தியல் வானியல் என்று இரு-துறைகளாகப் பிரிந்தது. விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது ''அவதானிப்பு வானியல்'' ஆகும். விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது கருத்தியல் வானியல் ஆகும். இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்க கருத்தியல் கோட்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வானியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது