"வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
இக்கூட்டமைப்பு, இன்றைய வடிவில் செப்டம்பர் 18, 1961, அன்று [[மெக்சிக்கோ நகரம்]], [[மெக்சிகோ]]வில் தோற்றுவிக்கப்பட்டது; இதற்கு முன்னர் இருந்த ''வட அமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு'' மற்றும் ''மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு'' ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து இது உருவாக்கப்பட்டது. இவ்வாறு இது, ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாக உருப்பெற்றது. இதன் முக்கியப் பணிகளாவன: நாடுகளுக்கும், பல்வேறு நாடுகளின் கால்பந்துக் கழகங்களுக்கும் அவற்றுக்குண்டான போட்டிகளை நடத்துவதும், கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிப் போட்டிகளை நடத்துவதும் ஆகும். இப்பகுதியில், ஆண்களுக்கான கால்பந்துப் போட்டிகளில் காலாகாலமாக [[மெக்சிகோ]] ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அண்மைக்காலங்களில் ''ஐக்கிய அமெரிக்காவும்'' முன்னிலை வகிக்கிறது. இவ்விரண்டு நாடுகளின் அணிகளே, இக்கூட்டமைப்பின் கோப்பையான தங்கக் கோப்பையை ஒருமுறை மட்டும் விடுத்து மற்ற அனைத்து முறையும் வென்றிருக்கின்றன.
 
==மேலும் பார்க்க==
*[[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]]
*[[ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு]]
*[[ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு]]
*[[ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்]]
*[[தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு]]
*[[ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு]]
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1606524" இருந்து மீள்விக்கப்பட்டது