பேரரசர் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன், பேரரசன் அலெக்சாந்தர் பக்கத்தை அலெக்சாந்தர் என்ற தலைப்புக்கு வழி...
No edit summary
வரிசை 31:
== தொடக்க காலம் ==
===வம்சாவழி மற்றும் குழந்தைப்பருவம்===
அலெக்சாண்டர் பண்டைய கிரேக்க நாட்காட்டியின் மாதமான ஹெகடோம்பியன் மாதத்தில் ஆறாம் நாள் (தற்போதைய நாட்காட்டியில் தோராயமாக [[கிமு]] 356 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் நாள்) அன்று [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்க]]ப் பேரரசின் மக்கெடோனின் தலைநகர் பெல்லாவில் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் நான்காம் மனைவி [[ஒலிம்பியாஸ்|ஒலிம்பியாசுக்கும்]] பிலிப்புக்கும் மகனாக பிறந்தார். இவரது தாயார் ஒலிம்பியாசின் தந்தை எபிராஸ் நாட்டின் அரசர் நியாப்டோலேமஸ் ஆவார். இவரது தந்தை இரண்டாம் பிலிப்பிற்கு ற்கு ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்த போதிலும் இவரது தாயார் ஒலிம்பியாஸ் மூலம் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு உண்டு. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் [[புளூட்டாக்]]கின் கூற்றுப்படி அலெக்சாண்டரை சுற்றிலும் அவரது குடும்பத்தில் பல்வேறு சகாப்தம் படைத்த மாவீரர்கள் இருந்துள்ளனர் என்று தெரியவருகிறது. அலெக்சாண்டரின் இளமைப்பருவத்தில் அவர் ஒரு செவிலியரால் வளர்க்கப்பட்டார். அலெக்சாண்டரும் பிற்காலத்தில் அவரது படையினை வியூகம் வகுக்கும் க்ளைடஸ் தி ப்ளாக் என்னும் பதவியில் அமர்ந்த அவரது சகோதரியுமான லனைகியும் இவர்களது தாயான ஒலிம்பியாசின் உறவினாரான லியோநிடாஸ் என்பவரிடம் கட்டுபாடான கல்விமுறையில் பயின்றனர். அலெக்சாண்டர் மக்கெடோனியானின் மென்மையான இளைஞனாக வளர்ந்தார். [[யாழ்|யாழிசை]] மீட்டுவதிலும், படிப்பதிலும், போர்க்கலையிலும், வேட்டையாடுவதிலும் வல்லவராகவல்லவராகத் திகழ்ந்தார்.
 
அலெக்ஸாண்டர் பத்தாவது வயதில் இருந்தபொழுது தேச்சாலி என்னுமிடத்தில் இருந்து வந்த ஒரு வணிகர் அவரது தந்தையிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். சொன்னதைப்போல அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது," என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_அலெக்சாந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது