ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 16:
}}
 
'''ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு''' ('''Oceania Football Confederation (OFC)''') என்பது ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது [[நியூசிலாந்து]], [[தொங்கா]], [[பிஜி]] மற்றும் [[பசிபிக் தீவுகள்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[ஓசியானியா]] பிராந்தியத்தின் [[காற்பந்தாட்டம்|கால்பந்து]]க் கட்டுப்பாட்டு அமைப்பாகும். ஓசியானியா பகுதியில் கால்பந்து விளையாட்டைப் பிரபலப்படுத்துவதும், பிராந்தியக் கால்பந்து சங்கங்களுக்கிடையேயான போட்டிகளை நடத்துவதும், [[உலகக்கோப்பை காற்பந்து|கால்பந்து உலகக்கோப்பை]]க்குத் தகுதிப் போட்டிகளை நடத்துவதும் இக்கூட்டமைப்பின் பணிகளாகும்.
 
[[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்]]பின் ஆறு பிராந்திய கூட்டமைப்புகளில் ''ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பே'' உறுப்பினர் சங்கங்களின் எண்ணிக்கையில் மிகச்சிறியதும், பெரும்பாலும் தீவு நாடுகளால் ஆனதும் ஆகும். மேலும், இப்பிராந்தியத்தில் [[காற்பந்தாட்டம்|கால்பந்து]] அவ்வளவாக பிரபலமான விளையாட்டு இல்லை. ஆகையால், உலக அளவிலான கால்பந்து விளையாட்டில் இதன் தாக்கம் குறைவே. பெரும் பெயர் பெற்ற கால்பந்துக் கழகங்களில் விளையாடும் அளவுக்கு வீரர்களும் இக்கூட்டமைப்பில் இல்லை. 2006-ஆம் ஆண்டு [[ஆத்திரேலிய கால்பந்துச் சங்கம்|ஆத்திரேலியா]] இக்கூட்டமைப்பிலிருந்து விலகி [[ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு|ஆசிய கால்பந்துக் கூட்டமைப்]]பில் இணைந்த பிறகு [[நியூசிலாந்து கால்பந்து|நியூசிலாந்தே]] இக்கூட்டமைப்பில், பெரிய கால்பந்துச் சங்கமாக இருக்கிறது.