சிவப்பு மூக்கு ஆள்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25:
==தோற்றக்குறிப்பு==
ஆட்காட்டிகள் அளவில் பெரிய கரைப்பறவைகளாகும். இவை 35 செமீ நீளம் இருக்கும். இதன் இறக்கைகளும் முதுகுப் பகுதியும் ஊதா நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் தலை, மார்பு, கழுத்தின் முன்பகுதி ஆகியன கருப்பு நிறத்திலும் இவ்விரண்டு நிறங்களுக்கு நடுவில் உள்ள பகுதி வெண்ணிறமாகவும் இருக்கும். இதன் கண்ணைச் சுற்றிலும் சிவப்பு நிறத்திலான தோல் இருக்கும். அலகுகள் சிவப்பாக நுனி மட்டும் கருப்பாக இருக்கும். கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
 
ஆண் மற்றும் பெண் பறவைகள ஒன்று போலவே இருக்கும், ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் 5% நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே துருத்தி கொண்டுமிருக்கும். பறவைகளின் நீளம் 320 முதல் 350 மில்லி மீட்டர் அளவும், இறக்கைகளின் நீளம் 208 முதல் 247 மில்லி மீட்டராகவும் அமைந்துள்ளது.இந்தியாவில் காணப்படும் இவ்வகை ஆட்காட்டி பறவைகளின் இறக்கைகளின் நீளம் சராசரியாக 223 மில்லி மீட்டர் அளவும், ஆனால் இலங்கையில் காணப்படும் இவ்வகை பறவைகளின் இறக்கைகளின் நீளம் சற்றே குறைவாக சராசரியாக 217 மில்லி மீட்டர் அளவும் அமைந்துள்ளன.
 
இவை பொதுவாக இணைகளாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் தண்ணீர் நிறைந்த இடங்களில், உழுத நிலங்களிலும், மேய்ச்சல் பகுதியிலும் மற்றும் குளம், குட்டைகள் போன்ற நீர் நிலைகளினோரமும் காணப்படுகின்றன.இனப்பெருக்கம் அல்லாத குளிர் காலங்களில் அரிதாக இப்பறவைகள் பெருங்குழுக்களாக சுமார் 26 பறவைகள் முதல் 200 பறவைகள் வரை ஒன்றாக வசிக்கின்றன. இவை மழை வளம் நிறைந்த வனங்களுக்கு அருகாமையிலும் வசிக்கின்றன.இவை தத்தி தத்தி, உடம்பை முன்னால் சாய்த்து உணவுகளை தேடி உட்கொள்ளும்.இவை இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இரை தேடும் என்றும் பௌர்ணமி இரவுகளில் இதன் இயக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இவை இடையறாது இரவு மற்றும் பகல் நேரங்களில் தான் சுற்றுபுறத்தை கண்காணித்து, மனிதர்களோ மற்ற உயிரினங்களோ எதிர்பட்டால் முதலில் எச்சரிக்கை குரல் எழுப்பி மற்ற உயிரினங்களை எச்சரிக்கை செய்கிறது. எனவே இப்பறவைகள் வேடர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது.இவை மெதுவான வேகத்தில், குறிப்பிடத்தக்க அளவு சிறகசைவுகளுடன் பறக்க கூடியவை ஆனால் கூட்டினை பாதுகாக்கும் போதும் மற்றும் பருந்தினால் வேட்டை ஆடப்படும் போதும் மிகுந்த வேகத்தோடு பறக்க கூடிய ஆற்றல் படைத்தவை. இவற்றின் குரல் அதீத சத்ததுடன் அலறல் ஒலியை ஒத்ததாய்யிருக்கும்.
 
==உணவு==
"https://ta.wikipedia.org/wiki/சிவப்பு_மூக்கு_ஆள்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது