சிவப்பு மூக்கு ஆள்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
ஆட்காட்டிகள் அளவில் பெரிய கரைப்பறவைகளாகும். இவை 35 செமீ நீளம் இருக்கும். இதன் இறக்கைகளும் முதுகுப் பகுதியும் ஊதா நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் தலை, மார்பு, கழுத்தின் முன்பகுதி ஆகியன கருப்பு நிறத்திலும் இவ்விரண்டு நிறங்களுக்கு நடுவில் உள்ள பகுதி வெண்ணிறமாகவும் இருக்கும். இதன் கண்ணைச் சுற்றிலும் சிவப்பு நிறத்திலான தோல் இருக்கும். அலகுகள் சிவப்பாக நுனி மட்டும் கருப்பாக இருக்கும். கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
 
[[படிமம்:Http://flickrRed wattled lapwing.com/photos/28163014@N00/489239545jpg|thumbnail|இடது|சிவப்பு மூக்கு ஆட்காட்டி குருவி]]
ஆண் மற்றும் பெண் பறவைகள ஒன்று போலவே இருக்கும், ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் 5% நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே துருத்தி கொண்டுமிருக்கும். பறவைகளின் நீளம் 320 முதல் 350 மில்லி மீட்டர் அளவும், இறக்கைகளின் நீளம் 208 முதல் 247 மில்லி மீட்டராகவும் அமைந்துள்ளது.இந்தியாவில் காணப்படும் இவ்வகை ஆட்காட்டி பறவைகளின் இறக்கைகளின் நீளம் சராசரியாக 223 மில்லி மீட்டர் அளவும், ஆனால் இலங்கையில் காணப்படும் இவ்வகை பறவைகளின் இறக்கைகளின் நீளம் சற்றே குறைவாக சராசரியாக 217 மில்லி மீட்டர் அளவும் அமைந்துள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிவப்பு_மூக்கு_ஆள்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது