கிரேக்க தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox National football team | Name = கிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 63:
}}
 
'''கிரீசு தேசிய கால்பந்து அணி''' ('''Greek national football team'''; {{lang-el|Εθνική Ελλάδος}}, {{lang|el-Latn|''Ethniki Ellados''}}), பன்னாட்டுக் [[காற்பந்தாட்டம்|கால்பந்துப்]] போட்டிகளில் [[கிரீசு]] நாட்டின் சார்பாக விளையாடும் அணியாகும்; இதனை, கிரீசு நாட்டில் கால்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான [[எல்லெனிக் கால்பந்துக் கூட்டமைப்பு]] தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. ஐரோப்பிய தேசிய கால்பந்து அணிகளில், சிறப்பான வெற்றிகளைப் பெற்ற அணிகளுள் [[கிரீசு தேசிய கால்பந்து அணி|கிரீசு]]ம் ஒன்றாகும்; [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]க் கோப்பையை வென்ற ஒன்பது அணிகளில் இதுவும் ஒன்று.
 
கால்பந்துக்கான பன்னாட்டுப் போட்டிகளில், நிரந்தரமாக சிறப்பான இடத்தை இந்த அணி பெற்றதில்லை. இவ்வணி வாகையர் பட்டம் வென்ற [[யூரோ 2004]]-க்கு முன்னர், [[கால்பந்து உலகக்கோப்பை]] [[1994 உலகக்கோப்பை கால்பந்து|1994]]-ஆம் ஆண்டிலும், [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]க்கு [[யூரோ 1980|1980]]-இலும் மட்டுமே தேர்வுபெற்றிருந்தனர். தமது இரண்டாவது பங்கேற்பிலேயே [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]யை 2004-இல் வென்றனர்; அப்போது, நடப்பு வாகையர்களாக இருந்த [[பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி|பிரான்ஸ்]] மற்றும் போட்டியை நடத்திய [[போர்த்துக்கேய தேசிய கால்பந்து அணி|போர்த்துகல்]] ஆகிய வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றிகண்டது.
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது