ஈயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் ஈயம்}}
[[படிமம்:LeadOreUSGOV.jpg|thumb|left|Leadஈயத் oreதாது]]
'''ஈயம்''' (Lead) ஒரு [[வேதியியல்]] [[உலோகம்]] ஆகும். இதன் தனிம ஆட்டவணைக் குறியீடு Pb. இதன் [[அணுவெண்]] 82. இது ஒரு ஒரு மென்மையன‌ [[உலோகம்]] அகும்..
'''ஈயம்''' (Lead) ஒரு [[வேதியியல்]] [[உலோகம்]] ஆகும். இதன் தனிம ஆட்டவணைக் குறியீடு '''Pb'''. இதன் [[அணுவெண்]] 82. இது ஒரு ஒரு மென்மையன‌ [[உலோகம்]] அகும். இது தட்டாக்கக்கூடிய பார உலோகமாகும். இது வளியுடன் இலகுவில் தாக்கமடைவதால் இதன் மீது காணப்படும் ஒக்சைட்டுப் படை இதனை அழகற்ற சாம்பல் நிறப்பொருளாகக் காட்டும். எனினும் வெட்டியவுடன் வெள்ளி போல பளபளக்கும். இதுவே மிகவும் அதிக திணிவுடைய கருவுள்ள நிலைப்புத்தன்மையுடைய (கதிர்த்தொழிற்பாற்ற) தனிமமாகும். இதற்கு அணுவெண்ணில் அடுத்ததாக உள்ள [[பிஸ்மத்]] முன்னர் மிகப்பாரமான கதிர்த்தொழிற்பாடற்ற தனிமம் எனக் கருதப்பட்ட போதிலும், பின்னர் பிஸ்மத் சொற்பளவு கதிரியக்கத்தைக் காட்டுவதாகக் கண்டறியப்பட்டது. எனவே ஈயமே நிலையான ஆனால் மிகவும் பாரமான கருவுடைய தனிமமாகும். பிஸ்மத்தின் அரை-வாழ்வுக்காலம் பிரபஞ்சத்தின் வயதை விடவும் பல மடங்கு அதிகமாகையால், பிஸ்மத்தே மிகவும் பாரமான ஆனால் நிலையான கருவுடைய தனிமம் என்ற வாதமும் பொது வழக்கில் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகும்.
[[படிமம்:LeadOreUSGOV.jpg|thumb|left|Lead ore]]
 
கட்டடத்தொழிலிலும், ஈய-அமில மின்கலங்களிலும், துப்பாக்கித் தோட்டாவிலும் ஈயம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஈயம் முற்காலத்தில் நீர்க்குழாய்த் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட போதிலும், இதன் விஷத் தன்மை காரணமாக அப்பயன்பாடு பின்னர் கைவிடப்பட்டது. உட்கொள்ளப்பட்டால் இது மனிதன் உட்பட அனேகமான விலங்குகளுக்கு மிகவும் விஷமானதாகும். இது நரம்பு மண்டலத்தை மிகவும் மோசமாகத் தாக்கி சேதப்படுத்தக்கூடியது. முலையூட்டிகளின் இரத்தச்சுற்றோட்டத் தொகுதியும் இதனால் பாதிப்படைகின்றது.
 
== குறிப்பிடத்தக்க இயல்புகள் ==
 
ஈயமானது நீலநிறங்கலந்த வெள்ளி போன்ற பளபளப்புடைய உலோகமாகும். வளியுடன் இது தொடுகையடைந்தால் சிறிது நேரத்துக்குள் தன் பளபளப்பை இழக்கின்றது. பல்வேறு சேர்வைகளின் கலவையாக ஒரு சாம்பல் நிறப்படை உலோகம் மேல் தோன்றுகின்றது. இப்படையில் காபனேற்றும், ஐதரசன் காபனேற்றும் பெரும் பங்கை உருவாக்குகின்றன.
ஈயம் மென்மையான, அதிக அடர்த்தியுடைய, நீட்டற்பண்பும், தட்டற்பண்பும் உள்ள உலோகமாகும். எனினும் ஈயத்தின் மின்கடத்துதிறன் குறைவாக இருக்கின்றது. ஈயம் இலகுவில் அரிப்படையாது. சேதன மூலக்கூறுகளுடன் தாக்கமடையக்கூடியது (இதன் விஷத்தன்மைக்குக் காரணம்). 327.5 °C வெப்பநிலையில் ஈயம் உருகுகின்றது. ஈயம் 1749 °C வெப்பநிலையில் கொதிக்கும். ஈயம் அயனாக்கம் அடையும் போது Pb<sup>2+</sup> கற்றயனை உருவாக்கும்.
 
===சமதானிகள்===
 
இயற்கையில் ஈயத்தின் நான்கு நிலையான சமதானிகள் உள்ளன. ஈயம்-204, ஈயம்-206, ஈயம்-207, ஈயம்-208 என்பனவே அவையாகும். இவற்றில் ஈயம்-204 சொற்பளவு கதிரியக்கம் (அரை வாழ்வுக்காலம்:1.4×10<sup>17</sup> வருடங்களுக்கு மேல்) கொண்டதாகக் கருதப்பட்டாலும், பொதுவாக ஈயம் கதிரியக்க அபாயமற்ற தனிமமாகும். செயற்கையாக ஈயத்தின் 34 சமதானிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் திணிவெண் 178 தொடக்கம் 215 வரை வியாபித்துள்ளது. இயற்கையான நான்கைத் தவிர மற்றைய அனைத்துச் சமதானிகளும் கதிரியக்கம் உடையனவாகும். கதிரியக்கச் சமதானிகளில் ஈயம்-205 ஓரளவு நிலைத்திருக்கக்கூடியது (அரை வாழ்வுக்காலம் 10<sup>7</sup> மடங்கில்).
 
== பயன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது