கொலோசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
== வரலாறு ==
 
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக சவ ஊர்வலத்தின் முன் மூன்று சோடிகளிடையே சண்டையிட்டுக்கொள்ளும் வழக்கம் ரோமானிகளின் வழக்கமாகும். இதனை பிற்காலத்திய அரசர்கள் ஒரு விழாவாக கொண்டாடத் தொடங்கினர்.இதற்காக கட்டப்பட்டதே கொலோசியம் ஆகும். இதில் சண்டையிடுபவர்கள் கிளாடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர். சுபானிய மொழியில் கிளாடி என்பதற்கு கத்தி என்று பொருளாகும். முதலில் இவ்வகை சண்டைகள் கத்தியை வைத்தே போடப்பட்டன. பின் கோடாரி, இரும்பிலால் ஆன வளையம், கேடையம், வீச்சரிவாள், பழுக்கக்காய்ச்சிய இரும்பு ஆகியவற்றைக் கொண்டு சண்டையிடத் தொடங்கியுள்ளனர். இங்கு சண்டையிடுபவர்கள் அடிமைகளாகவும், கீழ்சாதிகாரர்களாகவும், கைதிகளாகவும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். மேலும் கிறித்துவ மதம் அக்காலத்தில் வளர்ச்சி அடையாத காரணத்தினால் கிறித்துவர்களும் இது போன்ற சண்டை விளையாட்டுகளில் பங்கு பெறச் செய்யப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் ஒரே ஒருவர் மட்டுமே வெல்ல முடியும். மற்றவர்கள் அரசரின் ஆணைக்கேற்ப சிறைபிடிக்கப்படுவர் அல்லது விடுதலை செய்யப்படுவர். இவ்விளையாட்டுகளில் உணவிடாத சிங்கம், புலி ஆகியவற்றைக் கொண்டும் மனிதர்களைக் கொன்றுள்ளனர்.
 
=== கட்டுமானம் ===
[[படிமம்:Colosseum-interior.01.JPG|right|thumbnail|250px|கொலோசியத்தின் உட்புறத் தோற்றம் ஒன்று. நிலம் தற்கால மீள்கட்டுமானம் ஆகும். இதன் கீழ் அக்காலத்தில் விலங்குகளையும், அடிமைகளையும் அடைத்து வைக்கும் சிறிய அறைகள் இருந்தன.]]
 
கி.பி 72 ஆம் ஆண்டில், [[வெஸ்பாசியன்]] (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான [[டைட்டஸ்]] காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இதன் உயரம் சுமார் நூற்றைம்பது அடிகளாகும். இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. நீரோ அரசரின் பிரம்மாண்ட சிலைக்கு அருகினில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு கேலரிகள் கட்டப்பட்டுள்ளன. முதல் கேலரி அரச்ர் மற்றும் அவரது குடும்பத்தினரும் அமர்வதற்கான இடமாகும். இரண்டாம் கேலரி பெரும் நிலப்பிரபுக்களும், முக்கியமானவர்களும் அமரும் இடம் ஆகும். மூன்றாம் கேலரி தொழிளாலர்களும், நான்காம் கேலரி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது ஆகும். கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார். மேலும் இவ்விழாவில் ஆயிரம் கிளாடியேட்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 
=== ரோமர் வரலாற்றின் பிற்காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/கொலோசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது