கொலோசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
 
{{Ancient monuments in Rome
|name=கொலோசியம்
வரி 28 ⟶ 26:
'''கொலோசியம்''' (''Colosseum'', ''Coliseum'', அல்லது ''Flavian Amphitheatre'') என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] தலைநகரான [[ரோம்]] நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான [[கட்டிடம்]] ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை ''அம்ஃபிதியேட்டர்'' (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் ''வட்டவடிவ அரங்கம்'' என்ற பொருள் கொண்டது. ‘’மிகப் பிரம்மாண்ட’’ எனும் வேறு அர்த்தமும் கொலோசியத்திற்கு இருந்துவந்துள்ளது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, ''பிளேவியன் அம்ஃபிதியேட்டர்'' என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.
 
== வரலாறு ==
 
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக சவ ஊர்வலத்தின் முன் மூன்று சோடிகளிடையே சண்டையிட்டுக்கொள்ளும் வழக்கம் ரோமானிகளின் வழக்கமாகும். இதனை பிற்காலத்திய அரசர்கள் ஒரு விழாவாக கொண்டாடத் தொடங்கினர்.இதற்காக கட்டப்பட்டதே கொலோசியம் ஆகும். இதில் சண்டையிடுபவர்கள் கிளாடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர். சுபானிய மொழியில் கிளாடி என்பதற்கு கத்தி என்று பொருளாகும். முதலில் இவ்வகை சண்டைகள் கத்தியை வைத்தே போடப்பட்டன. பின் கோடாரி, இரும்பிலால் ஆன வளையம், கேடையம், வீச்சரிவாள், பழுக்கக்காய்ச்சிய இரும்பு ஆகியவற்றைக் கொண்டு சண்டையிடத் தொடங்கியுள்ளனர். இங்கு சண்டையிடுபவர்கள் அடிமைகளாகவும், கீழ்சாதிகாரர்களாகவும், கைதிகளாகவும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். மேலும் கிறித்துவ மதம் அக்காலத்தில் வளர்ச்சி அடையாத காரணத்தினால் கிறித்துவர்களும் இது போன்ற சண்டை விளையாட்டுகளில் பங்கு பெறச் செய்யப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் ஒரே ஒருவர் மட்டுமே வெல்ல முடியும். மற்றவர்கள் அரசரின் ஆணைக்கேற்ப சிறைபிடிக்கப்படுவர் அல்லது விடுதலை செய்யப்படுவர். கைதி ஒருவர் வென்றால் அவருக்கு விடுதலைக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்விளையாட்டுகளில் உணவிடாத சிங்கம், புலி ஆகியவற்றைக் கொண்டும் மனிதர்களைக் கொன்றுள்ளனர்.<ref>வேங்கடம் எழுதிய அடேங்கப்பா ஐரோப்பா நூல். விகடன் பிரசுரம் . பக்கம்-34</ref>
 
 
=== கட்டுமானம் ===
 
[[படிமம்:Colosseum-interior.01.JPG|right|thumbnail|250px|கொலோசியத்தின் உட்புறத் தோற்றம் ஒன்று. நிலம் தற்கால மீள்கட்டுமானம் ஆகும். இதன் கீழ் அக்காலத்தில் விலங்குகளையும், அடிமைகளையும் அடைத்து வைக்கும் சிறிய அறைகள் இருந்தன.]]
 
கி.பி 72 ஆம் ஆண்டில், [[வெஸ்பாசியன்]] (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின.<ref>வேங்கடம் எழுதிய அடேங்கப்பா ஐரோப்பா நூல். விகடன் பிரசுரம் . பக்கம்-33</ref><ref>{{cite book|title=The Colosseum|year=2005|publisher=Harvard University Press|isbn=0-674-01895-8|page=2|url=http://books.google.com/?id=dBSCMu9juPcC&pg=PR7&dq=Colosseum+started#v=snippet&q=Colosseum%20AD%2072&f=false|author1=Hopkins, Keith |author2=Beard, Mary|accessdate=19 January 2011}}</ref> எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான [[டைட்டஸ்]] காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இதன் உயரம் சுமார் நூற்றைம்பது அடிகளாகும். இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. நீரோ அரசரின் பிரம்மாண்ட சிலைக்கு அருகினில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு கேலரிகள் கட்டப்பட்டுள்ளன.<ref>[http://www.roman-colosseum.info/colosseum/building-the-colosseum.htm Building the Colosseum]</ref> முதல் கேலரி அரச்ர் மற்றும் அவரது குடும்பத்தினரும் அமர்வதற்கான இடமாகும். இரண்டாம் கேலரி பெரும் நிலப்பிரபுக்களும், முக்கியமானவர்களும் அமரும் இடம் ஆகும். கோலோசியத்தின் கூரையாக கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாயினை பயன்படுத்தியுள்ளனர். போட்டிகள் நடைபெறும் பொழுது மட்டும் இவற்றை வைத்து அரங்கத்தை மூடியுள்ளனர். எண்ணற்றவர்கள் வந்து செல்வத்ற்கு வசதியாக பல நுழைவு வாயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கொலோசியம் உலக அதிசயமாகவும் கருதப்பட்டது ஆகும். மூன்றாம் கேலரி தொழிளாலர்களும், நான்காம் கேலரி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது ஆகும். நான்கு கேளரிகள் மட்டும் அல்லாது ஒரு அடித்தளமும் கொலோசியதில் கட்டப்பட்டுள்ளது. இது அடிமைகள் காத்திருக்கும் இடமாகவும், ஆயுதங்கள் வைக்கும் இடமாகவும் , மிருகங்களின் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார். மேலும் இவ்விழாவில் ஆயிரம் கிளாடியேட்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விழாவின் ஒரு பகுதியாக அரங்கம் முழுவதும் நீர் நிரப்பி படகில் அடிமைகளை சண்டையிட வைத்துள்ளனர்.
 
 
=== ரோமர் வரலாற்றின் பிற்காலம் ===
217 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டுமமைக்கப்பட்ட இது, கிறிஸ்தவம், படிப்படியாக மனித உயிர்கள் பலியாகும் வீரவிளையாட்டுக்களுக்கு முடிவுகட்டும் வரை பயன்பட்டு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ஆம் ஆண்டுவரை பயன்பட்டது. 442 இலும், 508 இலும் ஏற்பட்ட புவியதிர்வுகளினால் இக்கட்டிடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது.
 
 
=== மத்தியகாலமும், மறுமலர்ச்சிக் காலமும் ===
வரி 46 ⟶ 49:
 
[[படிமம்:Colosseo2.png|thumbnail|right|கொலொசியம் ரோம், இத்தாலி]]
 
 
==மேற்கோள்கள்==
 
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.the-colosseum.net/idx-en.htm The colosseum] Un-official information website
* [http://www.artlex.com/ArtLex/r/images/roman_colosse.cutaway.gif Cross-section view of the Colosseum]
* [http://www.lauralee.com/news/romanplants.htm The flora of the Colosseum]
* [http://rome.arounder.com/it/monumenti/colosseo/colosseum-by-night.html Virtual tour of the Colosseum]
* [http://penelope.uchicago.edu/~grout/encyclopaedia_romana/gladiators/colosseum.html LacusCurtius entry on the Colosseum]
* [http://www.freereservation.com/roma2/17.htm Photos of the Colosseum]
* [http://ancientrome.ru/art/artworken/result.htm?alt=Coliseum&pnumber=20 Views of the Flavian Amphitheatre (Coliseum)]
 
{{New Seven Wonders of the World}}
"https://ta.wikipedia.org/wiki/கொலோசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது