நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
No edit summary
வரிசை 57:
மைக்குரோனேசிய மற்றும் [[பொலினீசியா|பொலினேசிய]] மக்கள் வசிக்கும் நவூரு தீவு [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் [[ஜெர்மன் பேரரசு|செருமன் பேரரசினால்]] ஆக்கிரமிக்கப்பட்டு அதன் ஒரு குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின், [[ஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]], மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] ஆகியவற்றின் கூட்டு நிருவாகத்தின் கீழ் [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகளின் அமைப்பின்]] கீழ் கொண்டுவரப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நவூரு [[சப்பான்|சப்பானி]]யப் படையினரால் கைப்பற்றப்பட்டது. போர் முடிவடைந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் [[ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சி|ஐநா பொறுப்பாட்சி]]யின் கீழ் கொண்டு வரப்பட்டது. [[1968]] ஆம் ஆண்டில் நவூரு விடுதலை அடைந்தது.
 
நவூருத் தீவின் மேற்பரப்பில் [[பாஸ்பேட்|பொஸ்பேட்டுப்]] பாறைகபாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. [[1960கள்|1960களின்]] இறுதியிலும், [[1970கள்|1970களின்]] தொடக்கத்திலும், நவூருவின் நபர்வரி வருமானம் ஏனைய நாடுகளை விட மிக அதிகமாகவிருந்தது. பொஸ்பேட்டு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுரங்கத் தொழிலினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, இந்நாட்டின் அறக்கட்டளை நிதியம் குறைய ஆரம்பித்தது. வருமான அதிகரிப்புக்காக, நவூரு வரிஏய்ப்பு மிகுந்த நாடாகவும், சட்டவிரோதமாக கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நாடாகவும் சிறிதுகாலம் இருந்தது. [[2001]] முதல் [[2008]] வரை, பின்னர் [[செப்டம்பர் 2012|2012 செப்டம்பர்]] முதல், ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது.
 
நவூருவின் ஓரவை நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். [[ஐக்கிய நாடுகள்]], [[பொதுநலவாய நாடுகள்]], [[ஆசிய அபிவிருத்தி வங்கி]], [[பசிபிக் தீவுகளின் ஒன்றியம்]] ஆகியவற்றில் நவூரு உறுப்பு நாடாகவுள்ளது. [[பொதுநலவாய விளையாட்டுக்கள்]], [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] ஆகியவற்றில் பங்குபெறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது