நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 67:
1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய மாலுமியும் திமிங்கில வேட்டையாடியவருமான ஜோன் பேர்ன் என்பவரே நவூருவில் கால் வைத்த முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவார். அவர் இத்தீவிற்கு "இனிமையான தீவு" (''Pleasant Island'') எனப் பெயரிட்டார். [[1830கள்]] தொடக்கத்தில் ஐரோப்பாவில் இருந்து திமிங்கில வேட்டையாளர்களாலும், குறிப்பாக நன்னீர் பெற்றுக் கொள்வதற்காகவும் கப்பல்கள் அடிக்கடி வந்து சென்றன.<ref name=spennemann>{{cite journal|last=Spennemann|first=Dirk HR|journal=Aquaculture International|date=January 2002|volume=10|issue=6|pages=551–562|doi=10.1023/A:1023900601000|title=Traditional milkfish aquaculture in Nauru}}</ref> இக்காலப்பகுதியில் ஐரோப்பியக் கப்பல்களில் இருந்து தப்பி வந்தவர்கள் இங்கு வாழத் தொடங்கினர். இத்தீவு மக்கள் ஐரோப்பிய வணிகர்களுடன் மது வகைகளையும், துப்பாக்கிகளையும் தமது உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பண்டமாற்றம் செய்தார்கள்.<ref>{{cite journal|last=Marshall|first=Mac|coauthors=Marshall, Leslie B|title=Holy and unholy spirits: The Effects of Missionization on Alcohol Use in Eastern Micronesia|journal=Journal of Pacific History|date=January 1976|volume=11|issue=3|pages=135–166|doi=10.1080/00223347608572299}}</ref> [[1878]] இல் ஆரம்பமான 12 இனங்களுக்கிடையேயான போரின் போது இந்த சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை நீடித்த இப்போரில் ஏறத்தாழ 500 பேர் வரையில் (தீவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்) கொல்லப்பட்டனர்.<ref>{{cite journal|journal=New York Law School Journal of International and Comparative Law|title=Nauru v. Australia|author=Reyes, Ramon E, Jr|volume=16|issue=1–2|year=1996|url=http://heinonline.org/HOL/LandingPage?collection=journals&handle=hein.journals/nylsintcom16&div=6&id=&page=}}</ref>
 
1888 ஆம் ஆண்டில் நவூரு [[செருமனி]]யுடன் இணைக்கப்பட்டு [[மார்சல் தீவுகள்|மார்சல் தீவு]] காப்பரசின் கீழ் நிருவகிக்கப்பட்டது.<ref name=firth>{{cite journal|last=Firth|first=Stewart|title=German labour policy in Nauru and Angaur, 1906–1914|journal=The Journal of Pacific History|date=January 1978|volume=13|issue=1|pages=36–52|doi=10.1080/00223347808572337}}</ref> செருமனியரின் வரவு அந்நாட்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது, நவூரு மன்னர்களின் ஆளுகைக்குள் வந்தது. இத்தீவின் மன்னர்களில் [[ஆயுவேயிதா]] என்பவர் குறிப்பிடத்தக்கவர். கிறித்தவ மதப்பரப்புனர்கள் 1888 இல் [[கில்பர்ட் தீவுகள்கிரிபட்டி|கில்பர்ட் தீவுகளில்]] இருந்து வந்தனர்.<ref name=hill/><ref>{{cite book|author=Ellis, AF|year=1935|title=Ocean Island and Nauru&nbsp;– their story|publisher=Angus and Robertson Limited|pages=29–39}}</ref> செருமனியக் குடியேற்றவாதிகள் இத்தீவை நவோடோ என்றும், ஒனெவேரோ என்றும் அழைத்தனர்.<ref>{{cite book|title=Deutsche Rundschau für Geographie und Statistik|author=Hartleben, A|year=1895|page=429}}</ref> முப்பதாண்டுகளுக்கு செருமனியினர் இத்தீவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். உள்ளூர்ப் பெண்ணைத் திருமணம் புரிந்த செருமனிய வணிகர் இராபர்ட் ராசுச் என்பவர் 1890 ஆம் ஆண்டில் நவூருவின் முதலாவது செருமனிய நிருவாகியாக நியமிக்கப்பட்டார்.<ref name=hill>{{cite book|last=Hill|first=Robert A (ed)|title=The Marcus Garvey and Universal Negro Improvement Association Papers|year=1986|publisher=University of California Press|isbn=9780520058170|chapter=2: Progress Comes to Nauru|volume=5}}</ref>
 
[[1900]] ஆம் ஆண்டில் நவூருவில் வளவாய்ப்புத் தேடுநரான ஆல்பர்ட் எலிசு என்பவரால் பொஸ்பேட்டு கண்டுபிடிக்கப்பட்டது.<ref name=firth/> பசிபிக் பொஸ்பேட்டு கம்பனி 1906 ஆம் ஆண்டில் செருமனியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு 1907 ஆண்டு முதல் பொஸ்பேட்டுகளை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.<ref name=autogenerated1>{{cite journal|last=Manner|first=HI|coauthors=Thaman, RR; Hassall, DC|title=Plant succession after phosphate mining on Nauru|journal=Australian Geographer|date=May 1985|volume=16|issue=3|pages=185–195|doi=10.1080/00049188508702872}}</ref> [[1914]] இல் [[முதலாம் உலகப் போர்]] ஆரம்பித்ததை அடுத்து நவூரு [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படையினரால் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து ஆத்திரேலியா, [[நியூசிலாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]] ஆகியன நவூரு தீவு உடன்படிக்கையில் 1919 இல் கையெழுத்திட்டன. இதன்படி நவூருத் தீவில் பொஸ்பேட்டுகளை தோண்டி எடுப்பதற்கு பிரித்தானிய பொஸ்பேட்டு ஆணையத்திற்கு உரிமைகள் வழங்கப்பட்டன.<ref name=gowdy>{{cite journal|journal=Land Economics|volume=75|issue=2|title=The Physical Destruction of Nauru|author=Gowdy, John M; McDaniel, Carl N|date=May 1999|pages=333–338}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது