லெனி ரீபென்ஸ்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஆகஸ்ட் 22, 1902 ஒரு ஜெர்மானிய ப்ரொடெச்டண்ட் குடும்பத்தில் லெனி பிறந்தார்<ref>"Leni Riefenstahl" by Leni Riefenstahl; pages: 11, 104</ref>. அவரது தந்தை சொந்தமாக ஒரு வெப்பமூட்டும் மற்றும் காற்றோட்டம் நிறுவனம் கொண்டிருந்தார். தனக்குப் பின் தனது நிறுவனத்தை லெனி நிர்வகிப்பார் என்ற என்ணத்தில் அவர் இருந்தார்<ref>"University of Washington; Courses: Leni Riefenstahl Biography "[http://courses.washington.edu/ger371/riefenstahl/biography.html]</ref>. ஆனால் லெனியோ ஓவியம் வரைவதிலும், நடனத்திலும் தனது ஆர்வத்தை காட்டினார். 1918 ல் லெனி கிரீம் ரேயட்டர் நடன பள்ளியில் நடனப் பயிற்சியாளராக சேர்ந்தார்.
 
லெனி தனது திறமையாலும், பாராட்டினாலும் நடனப் பள்ளியிலிருந்து முன்னேறி திரைப்படத் துறைக்குச் சென்றார். அர்னல்ட் பன்கிர்காகத் அவர் இயக்கிய படங்களில் " தி வொயிட் ஹெல் அப் பிட்ச் பளு"( 1929) திரைப்படத்தை G.W. பப்ஸ்ட் என்பவருடன் இணைந்து இயக்கினார். இப்படத்தின் புகழ் ஜெர்மனியையும் தாண்டி மற்ற நாடுகளில் பேசப்பட்டது. லெனி தானே தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் "தி ப்ளூ லைட்"(1932) என்ற திரைப்படம், கார்ல் மேயர் மற்றும் பெல்லா பலஸ் ஆகியோர் இணை எழுத்தாளர்களாக இப்படத்திற்கு பணியாற்றினார். இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் வெள்ளி பதக்கத்தை வென்றது. இப்படத்தில் லெனி ஒளிரும் மலைக்குகையை பாதுகாக்கும் ஒரு விவசாயப் பெண்மணியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் ஹிட்லரின் கவனம் லெனி மீது திரும்பியது. ஹிட்லர் லெனியை ஜெர்மானியப் பெண்களின் முன்மாதிரியாக திகழ்வதாய் நம்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/லெனி_ரீபென்ஸ்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது