கொழுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உள்ளிணைப்பு
வரிசை 1:
{{fats}}
'''கொழுப்புகள்''' (Fats) எனப்படுபவை பொதுவாக [[கரிமம்|கரிம]] [[கரைப்பான்|கரைப்பான்களில்]] கரையக் கூடியதும், [[நீர்|நீரில்]] கரையாததுமான பரந்த [[சேர்மம்|சேர்மங்களைக்]] குறிக்கும். [[வேதியியல்|வேதி]] முறைப்படி டிரைகிளிசரைடுகள், [[கிளிசரால்|கிளிசராலின்]] மும்மணமியங்கள் மற்றும் பல [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்களையும்]] '''கொழுப்புகள்''' எனலாம். இவற்றின் [[கட்டமைப்பு]] மற்றும் பொதிவுகளைப் பொருத்து கொழுப்புகள் [[திண்மம் (இயற்பியல்)|திடமாகவோ]] அல்லது [[திரவம்|திரவமாகவோ]] அறைவெப்பநிலையில் காணப்படும். எண்ணெய்கள், கொழுப்புகள் மற்றும் கொழுமியங்கள் முதலான சொற்கள் கொழுப்பைக் குறிக்க உபயோகப்படுத்தப்பட்டாலும், '''எண்ணெய்கள்''' சாதாரண அறைவெப்பநிலையில் திரவங்களாக இருக்கும் கொழுப்புகளையும், திடமாக இருக்கும் கொழுப்புகளைக் '''கொழுப்புகள்''' என்றும் வழக்கமாக அழைக்கிறோம். திட மற்றும் திரவ கொழுப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களை வழக்கமாக [[மருத்துவம்|மருத்துவ]] மற்றும் [[உயிரிவேதியியல்]] சூழலில் '''கொழுமியங்கள்'''[[கொழுமியம்]] (Lipids) என்றழைக்கிறோம். மேலும் நீரில் கரையாத, வழுவழுப்புத் தன்மைக்கொண்ட எந்தவொரு பொருளையும், அதன் [[வேதியியல்|வேதி]]வடிவத்தைப் பொருட்படுத்தாது, எண்ணெய் என்றழைக்கிறோம். உதாரணமாக, [[பெட்ரோலியம்]] (அல்லது கச்சா எண்ணெய்), வெப்பமூட்டும் எரி எண்ணெய் மற்றும் இன்றியமையா எண்ணெய்கள்<ref>{{cite book| last = Maton| first = Anthea| authorlink = | coauthors = Jean Hopkins, Charles William McLaughlin, Susan Johnson, Maryanna Quon Warner, David LaHart, Jill D. Wright| title = Human Biology and Health| publisher = Prentice Hall| year = 1993| location = Englewood Cliffs, New Jersey, USA| pages = | url = | doi = | id = | isbn = 0-13-981176-1| oclc = 32308337}}</ref>.
 
கொழுப்புகள், கொழுமியங்களில் உள்ள ஒரு பகுப்பாகும். மற்ற கொழுமியங்களிலிருந்து கொழுப்புகள் வேதிவடிவத்திலும், [[இயற்பியல்]] பண்புகளிலும் வேறுபடுகின்றன. கொழுப்பு [[மூலக்கூறு|மூலக்கூறுகள்]] வாழ்வின் பல நிலைகளிலும் [[கட்டமைப்பு]] மற்றும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை பெரும்பாலான சார்பூட்ட உயிரிகளின் ([[மனிதர்|மனிதர்கள்]] உட்பட) [[உணவு|உணவில்]] முக்கியமான பங்கு வகிக்கின்றன. [[கணையம்|கணையத்தில்]] உருவாகும் கொழுமியச்சிதைப்பி [[நொதியம்|நொதிகளால்]] கொழுப்புகளும், கொழுமியங்களும் [[உடல்|உடலில்]] சிதைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கொழுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது