வடமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[வேதம்]] எழுதப்பட்டிருக்கும் மொழியைத் தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் '''ஆரியம்''' என்றும், '''வடமொழி''' என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த வேத-மொழி வேதம் எழுதப்பட்ட கி.மு. 1500 ஆண்டைச் சார்ந்தது. [[சமற்கிருதம்|சமற்கிருத]] மொழிக்குப் [[பாணினி]] இலக்கணம் எழுதினார். இதன் காலம் பலராலும் ஒப்புக்கொண்டுள்ளபடி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு. [[தொல்காப்பியம்]] நூலுக்குச் [[சிறப்புப் பாயிரம்]] எழுதிய [[தொல்காப்பியர்|தொல்காப்பியரின்]] ஒருசாலை மாணாக்கர் [[பனம்பாரனார்]]. இவர் தொல்காப்பியரை [[ஐந்திரம்]] நிறைந்தவன் எனக் குறிப்பிடுகிறார். ஐந்திரம் பாணினியின் இலக்கணத்துக்கு முன்னோடியாக இருந்த பல இலக்கண நூல்களில் ஒன்று.
 
இந்த அடிப்படை வரலாற்று உண்மைகளை நன்கு உணர்ந்திருந்த தொல்காப்பிய உரையாசிரியரும், [[நன்னூல்]] உரையாசிரியர்களும் தமிழ் பேசப்பட்ட நிலத்தை அடிப்படையாக அமைத்துப் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான ''[[வடசொல்|வடசொல்லுக்கு]]'' இலக்கணம் கூறும்போது ''ஆரிய மொழி'' என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக ''வடமொழி'' என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர். <ref>வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ,<br />எயுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே<br />என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (எச்சவியல் 5) உரை எழுதும் [[இளம்பூரணர்]] "வடசொற் கிளவி என்று சொல்லப்படுவன; ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஒரீஇ, இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையனவாகும் சொல் என்றவாறு" - என்று எழுதுகிறார்.</ref>
 
ஆரியர் பேசிய மொழி ''ஆரியம்''. அதன் சொல் தமிழில் கலக்கும்போது அந்தச் சொல் தமிழருக்கு '''வடமொழி'''. ஆரியம் பேசும் மக்களுக்கு அவர்கள் குறியீட்டின்படி ''சமஸ்கிருதம்''. ஆரியம் என்றாலோ, வடமொழி என்றாலோ அது பாணினி இலக்கணம் எழுதிய சமற்கிருதத்தைக் குறிக்காது. அவருக்கு முன்பு அரியர்களால் பேசப்பட்டதும், 'ஐந்திரம்' முதலான இலக்கண நூல்களைக் கொண்டிருந்ததுமான வேத கால மொழியை உணர்த்தும்.
"https://ta.wikipedia.org/wiki/வடமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது