மிகிந்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
அநுராதபுரம் ஒரு சமவெளி நிலப்பகுதியாகும். இவ்வாறான பகுதியில் தனிமையான மலைப்பகுதி உருவாவதற்கு உள்ளீர்க்கப்படும் இயற்கை மாறுபாடுகளே காரணமாகின்றன. இங்கு பலவிதமான பாறை வகைகள் அடங்கியுள்ளன. [[கருங்கல்]], [[படிகம்|படிகக்கல்]] மற்றும் [[தீப்பாறை]] என்பன இந்தப் பாறை வகைகளில் சிலவாகும். மேலும், ''சந்திரகாந்தம்'' என்ற பாறை வகை இங்குள்ள பாறை வகைகளில் மிகவும் சிறப்பு மிக்கதாகும். இந்தப் பாறை வகையானது, பெல்ஸ்பார் கனிமத்தால் உருவானதாகும். பொதுவாக கருங்கல்லுடன் கலந்து பெல்ஸ்பார் கனிமம் காணப்படுகிண்றது. அத்துடன் இந்தமலைப்பகுதியில் குகைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. பாறைகளில் ஏற்படும் இயற்கை மாறுதல்களாலேயே, இவ்வாறான குகைகள் உருவாகின்றன.
 
==தாவரங்கள்==
உலர் வலயங்களுக்குரிய தாவர வகைகளையே இங்கு காணக்கூடியதாக உள்ளது. அதற்கமைய, சிறிய இலைகளைக் கொண்ட உயரமற்ற மற்றும் முட்புதர்கள், கள்ளித் தாவரங்கள் இங்கு அதிகம் வளர்கின்றன. அத்துடன், பல்வேறு விதமான மரங்களையும் மிகிந்தலைக் குன்றுப்பகுதியில் அதிகமாகக் காணக்கூடியதாகவுள்ளது. முன்னர் இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவே இருந்துள்ளது. அக்காலகட்டங்களில் மாமரங்கள் அதிகம் காணப்பட்டதால், இப்பகுதி 'அம்பஸ்தலய' என்று அழைக்கப்பட்டது.
==வெளி இணைப்புகள்==
*[http://www.lankalibrary.com/heritage/mihintale.htm Mihintale: The cradle of Buddhism in Sri Lanka]
"https://ta.wikipedia.org/wiki/மிகிந்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது