போர்த்துகல் தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, replaced: எசுப்பானியத் தேசிய கால்பந்து அணி → எசுப்பானியா தேசிய காற்பந்து அணி using AWB
 
வரிசை 38:
'''போர்த்துக்கல் தேசிய கால்பந்து அணி''' (''Portugal national football team'', {{lang-pt|Selecção Nacional de Futebol de Portugal}}) பன்னாட்டு ஆடவர் [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்டங்களில்]] [[போர்த்துகல்]] சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை போர்த்துக்கல்லில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான [[போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு]] மேலாண்மை செய்கின்றது. இதன் தன்னக விளையாட்டரங்கமாக எசுடேடியோ நேசியோனல் விளங்குகிறது. தலைமைப் பயிற்றுனராக பவுலோ பென்ட்டோ உள்ளார். தங்களது முதல் [[1966 உலகக்கோப்பை கால்பந்து| உலகக்கோப்பையிலேயே]] அரையிறுதிக்கு முன்னேறினர்; [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] வெம்பிளி விளையாட்டரங்கில் நடந்த அந்த ஆட்டத்தில் அந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற [[இங்கிலாந்துத் தேசிய கால்பந்து அணி]]யிடம் 2–1 என்ற கோல் கணக்கில் தோற்றனர். அடுத்து இரண்டு முறை, [[1986 உலகக்கோப்பை கால்பந்து|1986]] and [[2002 உலகக்கோப்பை கால்பந்து|2002]] ஆண்டுகளில், உலகக்கோப்பையில் பங்கேற்றாலும் இருமுறையும் முதல் சுற்றிலேயே தோற்றனர். 1986ஆம் ஆண்டு போட்டிகளின்போது காற்பந்து விளையாட்டாளர்கள் பரிசுப் பணம் குறித்து முதலாம் ஆட்டத்திற்கும் இரண்டாம் ஆட்டத்திற்கும் இடையே பயிற்சி கொள்வதை நிறுத்தி பணிநிறுத்தம் மேற்கொண்டனர்.
 
2003இல் போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு [[பிரேசில் தேசியக் கால்பந்து அணி|பிரேசில்]] [[2002 உலகக்கோப்பை கால்பந்து|2002இல் உலகக்கோப்பை]] வெல்லக் காரணமாய் அமைந்த முன்னாள் பிரேசிலிய தலைமைப் பயிற்றுனர் [[லூயி பெலிப் இசுகோலரி]]யை தங்கள் அணிக்கு பயிற்றுனராக நியமித்தது. இவரது பயிற்சியின் கீழ் [[யூரோ 2004]] இறுதியாட்டத்திற்கு முன்னேறியது; இறுதி ஆட்டத்தில் [[கிரீசு தேசிய கால்பந்து அணி|கிரீசிடம்]] தோற்றது. [[2006 உலகக்கோப்பை கால்பந்து|2006 உலகக்கோப்பையில்]] இரண்டாம் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 2008ஆம் ஆண்டு யூரோ போட்டிகளுக்குப் பிறகு இசுகோலரி விலகினார்;புதிய பயிற்றுனராக கார்லோசு குயிரோசு பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் போர்த்துகல் [[2010 உலகக்கோப்பை கால்பந்து|2010 உலகக்கோப்பையில்]] இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது; அங்கு அவ்வாண்டு உலகக்கோப்பை வாகையாளர்களான [[எசுப்பானியத்எசுப்பானியா தேசிய கால்பந்துகாற்பந்து அணி|எசுப்பானியாவிடம்]] தோற்றது. அணியின் மோசமான ஆட்டங்களினால் குயிரோசு நீக்கப்பட்டார். தற்போது பவுலோ பென்ட்டோ பயிற்றுனராக உள்ளார். இவரது வழிகாட்டுதலில் [[யூரோ 2012|யூரோ 2012இல்]] அரையிறுதிக்கு முன்னேறியது.
 
போர்த்துகல்லின் அணியில் சிறப்பான பல காற்பந்தாட்ட வீரர்கள் இருந்துள்ளனர்: பெர்னாண்டோ பெய்ரோட்டோ, யோசு அக்குவாசு, மாரியோ கொலுனா, [[எய்சேபியோ]], அம்பர்ட்டோ கொயில்ஹோ, பவலோ ஃபூட்ரெ, ரிக்கார்தோ கார்வால்ஹோ, லூயி ஃபிகோ, வைடர் பைய்யா, [[பவுலேட்டா]], ரிக்கார்தோ காரெசுமா, நுனோ கோமெசு, ரூயி கோஸ்ட்டா, [[டெக்கொ]], நானி, ஜோவோ மியூடின்ஹோ, ஹெல்தர் போசுடிகா, மிகுவில் வெலோசோ, ரவுல் மீரெலெசு, [[கிறிஸ்டியானோ ரொனால்டோ]]. இத்தகைய அருமையான விளையாட்டாளர்கள் இருந்தபோதும் போர்த்துக்கல் இன்னமும் எந்த முதன்மையான கோப்பையையும் வெல்லவில்லை. பலமுறை வெற்றியை நெருங்கி கோட்டை விட்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துகல்_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது