கின்னஸ் உலக சாதனைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: sr:Гинесова књига рекорда (књига) (deleted)
வரிசை 26:
== மேற்கோள்கள் ==
<references/>
பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்­றில்­லாமல் வாழும் போது தனக்கும் அடுத்­த­வ­ருக்கும் பிர­யோ­ச­ன­மான வாழ்க் கையை வாழ்­வ­துடன் எமது பெயரை நிலை­நாட்டும் சாத­னை­யொன்­றையும் நிலை­நாட்ட முயற்­சிக்க வேண்டும் என்­ப­வர்­க­ளுக்­கான தளமே கின்னஸ் உலக சாத­னைகள்.
 
ஒவ்­வொரு வரு­டமும் வெளி­வரும் கின்னஸ் புத்­தகம், பல்­து­றை­களில் சாதனை படைத்­த­வர்­களின் பெயர்­களை சுமந்­து­வரும். அந்த சாத­னை­களில் சில வேடிக்­கை­யான சாத­னை­க­ளா­கவும் சாத­ர­ண­மா­ன­தா­கவும் புது­மை­யா­ன­தா­கவும் இருக்கும். அவை முயற்­சித்தால் நாமும் முறி­ய­டித்து விட­லாமே என்ற எண்­ணத்தை தோற்­விக்கும்.
 
 
எத்­தனை கன­மான விட­யத்­தையும் தாங்கும் மூளையும் இத­யமும் அத்­தனை கன­மா­ன­தல்­லவே. அது­போ­லவே சாத­னை­யா­ளனும் சாதா­ர­ண­மாக இருக்­கிறான் என்ற நம்­பிக்­கையை ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் மன­திலும் விதைப்­ப­துபோல், கின்னஸ் புத்­த­கத்தின் ஆரம்­பமும் சாதா­ர­ண­மா­கவே அமைந்­தது.
 
கின்னஸ் உலக சாதனை புத்­த­கத்தின் ஆரம்பம் சுமார் 60 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அயர்­லாந்­தினன் வேக்ஸ்போர் என்ற இடத்­திற்கு சேர் ஹக் பீவர், பறவை வேட்­டைக்குச் சென்றார். இதன்­போது வேட்­டை­யா­டப்­படும் பற­வை­களில் ப்ளோவர் (புறாவை ஒத்த ஒரு வகை பறவை) எனப்­படும் பற­வைதான் ஐரோப்­பா­வி­லேயே வேக­மா­னதா என அறிய முற்­பட்டார்.
 
ஆனால் அதற்­கான எது­வி­த­மான அதி­கா­ர­பூர்வ ஆதா­ரங்­களும் அவ­ருக்கு கிடைக்­க­வில்லை. இதற்­கான குறிப்பு புத்­த­கங்­க­ளையும் அவரால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. இதனால் தொடர்ந்து இது போன்ற விட­யங்­களை அறிய செர் ஹக் பீவரே ஒரு புத்­த­கத்­தினைக் உரு­வாக்­கினார். அதுவே கின்னஸ் உலக சாத­னைகள் புத்­தகம்.
 
1954ஆம் ஆண்டு முதன் முறை­யாக சாத­னைகள் அடங்­கிய புத்­த­க­மொன்­றினை ப்லீட் ஸ்ரீட் செய்­தி­தா­ளுடன் இணைத்து இரட்­டை­யர்­க­ளான நொரிஸ் மற்றும் ரோஸ் மெக்­வேர்டர் விநி­யோ­கித்­தனர்.
 
இவர்கள் 1000 பிர­தி­களை அச்­சிட்டு இல­வ­ச­மாக வழங்­கினர். இதற்கு அடுத்த வரு­டமே 1955ஆம் முதன் முறை­யாக அதி­கா­ர­பூர்­வ­மான கின்னஸ் புத்­தகம் (Guinness Book of Rcords) என்ற பெயரில் பிரித்­தா­னி­யாவில் வெளி­யாகி பெரும் வர­வேற்­பினைப் பெற்­றது.
 
அன்­றி­லி­ருந்து இன்று வரையில் 26 மொழி­களில் 100 இற்கும் அதி­க­மான நாடு­களில் 115 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான பிர­திகள் விற்­ப­னை­யா­கி­யுள்­ளன. அதி­க­ளவில் விற்­ப­னை­யாகும் புத்­தகம் மட்­டு­மன்றி அதி­க­ளவில் திரு­டப்­படும் புத்­த­கங்­க­ளிலும் கின்னஸ் புத்­தகம் ஒன்று எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
 
உலகின் பல சாத­னை­களை தாங்கி வரும் இப்­புத்­த­கத்தின் 2014ஆம் ஆண்­டிற்­கான பதிப்பு இம்முறை கடந்த 12ஆம் திகதி வெளி­யா­னது.
 
கின்­னஸில் இடம்­பி­டிக்க என்ன செய்ய வேண்டும்?
 
இதில் கடந்த ஒரு வரு­டத்தில் சாத­னைகள் படைத்த பலரின் பெயர்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இவர்­களின் பெயர்கள் இம்­முறை இடம்­பெற்­றது போல இனி வரும் பதிப்­பு­களில் இடம்­பெற நாம் செய்ய வேண்­டி­யவை எவை என எப்­போ­தா­வது சிந்­தித்­தி­ருக்­க­றீர்­களா? அப்­ப­டி­யானால் நீங்கள் செய்ய வேண்­டி­யது இவைதான்.
 
கின்னஸ் உலக சாத­னை­க­ளுக்­கென பிரத்­தி­யே­க­மாக http://www.guinnessworldrecords.com என்ற இணை­யத்­தளம் உள்­ளது. இதில் உங்­க­ளது சாத­னையை இணைப்­ப­தற்­கான விண்­ணப்­பப்­ப­டிவம் உண்டு. உங்­க­ளிடம் ஏதா­வது விசே­ட­மான திறமை உண்டு எனில் இதில் உங்­க­ளது சாதனை குறித்து பதிவு செய்­து­கொள்­ளுங்கள்.
 
பின்னர் உங்­க­ளது விண்­ணப்பம் தொடர்பில் ஆரா­யப்­பட்டு 6 முதல் 12 வாரங்­களில் உங்­க­ளுக்கு பதில் கிடைக்கும். இவை முற்று முழு­தாக இல­வ­ச­மா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. ஆனால் உங்­க­ளுக்கு விரைவில் வெறும் 3 வேலை நாட்­களில் பதில் கிடைக்க வேண்­டு­மெனில் மட்டும் 450/700 அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 60,000/92,500 ரூபா) கட்­டணம் செலுத்த வேண்டும்.
 
சாத­னைகள் எவ்­வாறு அமைய வேண்டும்?
 
சாத­னைகள் உலக சாத­னை­க­ளாக மாற கின்னஸ் அமைப்பு வரை­ய­றுத்­துள்ள விதி­க­ளுக்கு அமை­வாக இருக்க வேண்டும்.
 
மிகப்­பெ­ரிய, மிக உய­ர­மான, அதி­நீ­ள­மான, அதி­வி­ரை­வாக, அதி பார­மான இவ்­வாறு உயர் மட்­டத்தில் சாத­னைகள் அமைய வேண்டும். அது அள­வி­டப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும்.
 
ஏதா­வது ஒரு விட­யத்தில் மாத்­திரம் சாதனை கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். உதா­ர­ண­மாக, கார் பயணம் என்றால் மிக வேக­மாக பய­ணித்தல் அல்­லது அதி­க­மாக தூர­மாக பய­ணித்தல். இவ்­வா­றில்­லாமல் வேக­மான காரில் தூர­மான பயணம் சாத­னை­யா­கக்­கொள்­ளப்­ப­டாது.
 
இதனை உங்­களால் நிரூ­பிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும். அத்­துடன் அது பின்னர் முடி­றி­ய­டிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­தா­கவும் இருக்க வேண்டும். இவ்­வ­டிப்­ப­டை­களில் உங்­க­ளிடம் உள்ள திற­மைகள் இருந்தால் நீங்­களும் கின்னஸ் சாத­னை­யா­ள­ரா­கலாம்.
 
ஆனால் சில சந்­தர்ப்­பங்­களில் சில சாத­னைகள் கின்­னஸின் வகைக்குள் அடங்­கா­விட்­டாலும் சாத­னை­க­ளாக தேவை கருதி மாறலாம். அவை மனி­தனால் அல்­லது இயற்­கையால் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அமை­யலாம்.
 
எத்­து­றையில் சாதனை படைக்­கலாம்?
 
என்ன சாதனை படைப்­பது என்­பது குறித்த ஒரு திட்டம் இருந்தால் அதன் பால் நீங்கள் முயற்­சிக்­கலாம். அது விசித்­தி­ர­மா­ன­தாக இருந்­தாலும் சரி விவே­க­மா­ன­தாக அமைந்­தாலும் சரி அதே­போல வேடிக்­கை­யாக அமைந்­தாலும் அவை அதி உயர் மட்டம் என்றால் சாத­னை­யாக அமைந்­து­விடும்.
 
ஒரு நிமி­டத்தில் அதிக தட­வைகள் கைதட்டிக் கூட உலக சாதனை படைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே சிறிய விட­யங்­க­ளாக இருந்­தாலும் அவை உலக சாத­னை­யாக கவ­னத்தில் கொள்­ளப்­படும்.
 
இவ்­வாறு உங்­க­ளுக்கு எது­வி­த­மான யோச­னையும் இல்லை என்றால் பழைய சாத­னை­களை முறி­ய­டிக்க முயற்­சிக்­கலாம். அல்­லது கின்னஸ் இணையப் பக்­கத்தில் Explore Records என்ற பகு­தியில் முயற்­சிக்­கூ­டிய சாத­னை­களை இடம்­பெறும். இதனை ஒரு குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் செய்து முடித்தால் அது சாத­னை­யாக அமையும்.
 
அண்­மையில் ஒரு நிமி­டத்தில் முகத்தில் அதி­க­ள­வான கட­தா­சி­களை ஓட்­டினால் சாதனை என்ற அம்­சமும் ஒரு நிமி­டத்தில் அதிக நாணயக் குற்­றி­களை அடுக்­கு­வதும் சாத­னை­யாக நிகழ்த்­து­வ­தற்கு கின்னஸ் வாய்ப்­ப­ளித்­தி­ருந்­தது.
 
இது போன்ற இன்னும் ஏரா­ள­மான விட­யங்கள் சாத­னைக்­காக காத்­தி­ருக்­கின்­றன. அவை வாரத்­திற்கு சுமார் 1000 என்ற ரீதியில் கின்னஸ் அமைப்­ப­ா­ளர்­க­ளுக்கு கிடைக்­கப்­பெ­று­கின்­றதாம்.
 
கின்னஸ் உலக சாதனைப் புத்­தகம் தொடர்பில் 2005ஆம் ஆண்டு முதல் அதன் பிர­தம ஆசி­ரி­ய­ராக சேவை புரியும் க்ரேக் கிளண்டே கூறுகையில், புத்தகம், டீ.வி, ஈ புத்தகம், எப்ஸ், புதிய தொழில்நுட்பம் (2014ஆம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகம் 3டி வடிவில் வெளி யாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.) என எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் கின்னஸ் புத்தகம் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 40 ஆயிரம் சாதனைகள் பட்டியலிடப்படுகிறது. ஆனால் அவற்றில் 10 சதவீதமானவையே புத்தகத்தில் இடம்பெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
 
 
இதுவெல்லாம் சாதனையா நினைக்கா மல் இதுவல்லவோ சாதனை நீங்கள் துணிந்து செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதனையாக அமையலாம். இதன் மூலம் உங்களது பெயரும் நாளை பெறுவாய்ந்த கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறலாம்.
- See more at: http://www.metronews.lk/feature.php?feature=35&display=0#sthash.IsXoXybc.dpuf
 
== மேலும் படிக்க ==
"https://ta.wikipedia.org/wiki/கின்னஸ்_உலக_சாதனைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது