கடலாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 32:
== வாழ்வியல் ==
=== இனப்பெருக்கம் ===
 
ஆமைக‌‌ள் மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவை. கட‌லி‌ல் வாழு‌ம் பெ‌ண் ஆமைக‌ள் கரு‌த்த‌ரி‌த்தது‌ம், கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாகப் பய‌ணி‌க்க‌த் துவ‌ங்கு‌ம். கரையை அடை‌ந்தது‌ம் ம‌ண்‌ணி‌ல் கு‌ழி தோ‌ண்டி மு‌ட்டைகளை இ‌ட்டு‌வி‌ட்டு செ‌ன்று‌விடு‌கி‌ன்றன. ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்யும் இவை மணற்பாங்கான கடற்கரையில்தான் முட்டையிடுகின்றன. கடற்கரையில் 50 முதல் 80 செ.மீ வரையிலான குழி தோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகள் வரை இட்டு அக்குழியை மூடி விடுகின்றன. 200 மு‌ட்டைகளை ஒரே சமய‌த்‌தி‌ல் கூட இ‌ட்டு‌விடு‌ம். முட்டைகள் குஞ்சுகளாக மாற சூரிய வெப்பம் தேவை என்பதால் முட்டையிட அவை கடற்கரைக்கு வருகின்றன. 60 முதல் 90 நாட்களில் முட்டைகள் குஞ்சுகளாகி கடலை நோக்கி ஊர்ந்து சென்று பின்னர் நீரில் நீந்தி ஆழ்கடலை அடைகின்றன. 1000 ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளைத் தாண்டி முதிர்ந்த பருவத்தை அடையும். பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு.
==== முட்டை இடல் ====
 
ஆமைக‌‌ள் மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவை. கட‌லி‌ல் வாழு‌ம் பெ‌ண் ஆமைக‌ள் கரு‌த்த‌ரி‌த்தது‌ம், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாகப் பய‌ணி‌க்க‌த் தொடங்கு‌ம். ப்வை பெரும் கூட்டமாக அல்லது சிறிய குழுக்களாக வந்து பெரும்பாலும் ஒபிரஹேசத்திலேயே முட்டைகளை இடுகின்றன. அதாவது, ஒருமுறை முட்டை இட்ட கடற்கரையையே அடுத்தமுறையும் முட்டையிடுவதற்காகத் தெரிவுசெய்கின்றன. முட்டையிடவுள்ள கரையை அண்மித்த கடலில் குறித்த கடல் ஆமை இரவாகும் வரை காத்திருக்கும். இரவானதும் கடற்கரைக்குச் சென்று, தெரிவுசெய்த இடத்தில் தனது உடல் நிலத்தில் பதிவதற்கு ஏற்றவாறு முன்னங்கால்களால் குழி ஒன்றைத் தோண்டி, பின்னர் அந்தக் குழிக்குள் தனது பின்னங்கால்களால் கோப்பை வடிவில் குழி ஒன்றையும் தோண்டிக் கொள்ளும். இவ்வாறு முட்டை இடுவதற்கெனத் தோண்டும் குழி ''முட்டைக் கூடு'' என அழைக்கப்படுகின்றது. முட்டைக்கூடானது 50 முதல் 70 சென்ரிமீற்றர் அளவு ஆழத்தில் இருக்கும். இத்தகைய அளவுடைய ஒரு கூட்டில் சுமார் 100 முதல் 150 முட்டைகள் வரை இடும். பெரும்பாலான கடல் ஆமைவகைகளின் முட்டையொன்றின் அளவும் தோற்றமும் மேசைப்பந்தொன்றைப்போல் இருக்கும் இந்த முட்டையின் கோது மிகவும் மென்மையானது. முட்டை இட்டு முடிந்த பின்னர் பெண் கடலாமை அதன் முன்னங்கால்களால் மணலை வீசி முட்டைக்கூட்டை மூடிவிடும். முட்டைகளை மணல் போட்டு மூடிய பின்னர் அது மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். இந்த முட்டைகள் சூரிய வெப்பத்தால் மணல் சூடாகும் போது இயற்கையாகவெ அடைகாக்கப்பட்டு, இரண்டு மாதங்களில் அதாவது 60 நாட்களில் பொரித்து குஞ்சுகளாக வெளிவருகின்றன.
 
==== குஞ்சுகளின் பிறப்பு ====
 
60 நாட்களின் பின்னர் முட்டைகளில் இருந்து வெளிவரும் கடலாமக் குஞ்சுகள் இரண்டு நாட்களுக்கு முட்டைக்கூட்டினுள்ளேயே உயிர்வாழும். அப்போது. அவை அங்கும் இங்கும் செலவதால், அந்த அசைவின் காரணமாக, கூட்டின் மேற்பகுதியில் இருபக்கங்களிலும் உள்ள மணல் அதன் அடிப்பகுதியில், விழுந்து நிறையும். இதனால் கூட்டுக்குள் உள்ள ஆமைக் குஞ்சுகள் இயல்பாகவே, மேலே வந்து வெளியேறும். எவ்வாறாயினும், இந்த கடல் ஆமைக் குஞ்சுகள் இரவு வேளைகளிலேயே கூட்டில் இருந்து வெளிவரும். பின்னர், கடல் நீரின் மீது விழுகின்ற நிலவொளியின் ஆதரவுடன், மிக வேகமாக கடலை ன்நோக்கி ஓடும். இவ்வாறு கடலை நோக்கிச் செல்லும் குஞ்சுகள், நண்டுகள் மற்றும் கடல் பறவைகள் போன்ற உயிரினங்களின் தொல்லைகளுக்கு இலக்காகும் வாய்ப்புக்கள் அதிகமாய் உள்ளன. அவ்வாறே, கடலுக்குள் சென்ற பின்னர் அங்கு வாழும் பெரிய மீன்களாலும் ஏனைய கடல்வாழ் உயிரினங்களாலும் கூடைந்த சின்னஞ்சிறு குஞ்சுகளுக்குன் ஆபத்துக்கள் ஏற்படும். எவ்வாறாயினும், இந்த ஆபத்துக்களையும் தாண்டி அவை தொடர்ச்சியாக 48 மணித்தியாலங்களுக்கு நீந்திச் செல்லும். கடல் ஆமைக்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து பருவமைடைய 30 ஆண்டுகள் வரை செல்லும். 1000 ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளைத் தாண்டி முதிர்ந்த பருவத்தை அடையும். பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு. வளர்ச்சி அடந்த ஆண் கடல் ஆமைக்கு முன்னங்கால்களில் நீளமான நகங்களும் பெண்கடல் ஆமையைவிட ஓரளவு நீளமான வால் ஒன்றும் காணப்படுகின்றது.
 
=== உணவு ===
"https://ta.wikipedia.org/wiki/கடலாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது