கணபதி காங்கேசர் பொன்னம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
==அரசியல் மாற்றங்கள்==
 
1970 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970 இல் பதவிக்கு வந்த [[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]] அரசு தமிழருக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் தமிழ் இளைஞர் மத்தியில் தீவிரவாதம் முளைவிடத் தொடங்கியது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக, [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]], [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]], [[எஸ். தொண்டமான்]] ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர [[அரசியல்|அரசியலில்]] இவர் நேரடியாக இறங்கவில்லை.
 
தமிழர் கூட்டணியினர் [[தமிழீழம்]] என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய [[அ. அமிர்தலிங்கம்|அமிர்தலிங்கம்]] முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ''ட்ரையல் அட் பார்'' எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்கேற்று வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கணபதி_காங்கேசர்_பொன்னம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது