சரோஜினி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) _ ன் ஆளுனராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமைடைந்தர்.
 
==கவிதைத் துறை==
17 வயதில் சரோஜினி அவர்கள் டாக்டர்.முத்யாலா கோவிந்தராஜுலு அவர்களை சந்தித்து அவர் மீது [[காதல்]] வயப்பட்டார். 19 வயதில் தனது படிப்பினை முடித்த பின்னர், ஜாதி விட்டு ஜாதி மேற்கொள்ளப்படும் திருமணங்கள் செல்லாத காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமண வாழ்வு மிகவும் மகிழ்ச்சிகரமானதாகக் கழிந்தது. 1898 ஆம் ஆண்டு சட்டப்படி (1872) சென்னையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார்.
 
சரோஜினி நாயுடு கவிதைத் துறைக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும். அதன் காரணமாக அதை பாடவும் முடியும். 1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு ''தி கோல்டன் த்ரெஷோல்டு'' என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டது: ''தி பேர்ட் ஆஃப் டைம்'' (1912) மற்றும் ''தி புரோக்கன் விங் '' (1917)
பின்னர் அவரது ''தி விஸார்டு மாஸ்க்'' மற்றும் ''எ டிரஷரி ஆஃப் போயம்ஸ்'' ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா வெளியிடப்படாத தனது தாயின் கவிதைகளை ''தி ஃபெதர் ஆஃப் டான்'' என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சரோஜினி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது