பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(→‎top: *விரிவாக்கம்*)
(*திருத்தம்*)
மரபு நூலிழை (DNA) ஏணியொன்றைச் முறுக்கி வைப்பது போன்ற இரட்டைச் சுருள் (double helix) வடிவ அமைப்பாகும். இந்த பிரித்தல் நிகழ்வின் போது, 94–96°செ [[வெப்பநிலை]]யில் இரட்டைச்சுருளில் இருக்கும் இழைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு இரு தனி இழைகளை உருவாக்கும். நகலாகப் பெருக்கிப் பெறப்பட வேண்டிய பகுதியிலுள்ள வேறுபட்ட தாங்கிகளின் (bases) விகிதத்தைப் பொறுத்து, இந்தப் படிநிலைக்கான வெப்பநிலையில் சிறிய வேறுபாடுகள் இருக்கும்.
 
==== சேர்த்தல் ==
இந்நிகழ்வில் பிரிக்கப்பட்ட மரபு நூலிழைகள் ஒவ்வொன்றின் முடிவுப் பகுதியில், அவற்றிற்கென உருவாக்கப்பட்ட முன்தொடர்கள் (primers) இணைந்து கொள்ளும். இந்த முன்தொடர்கள், குறிப்பிட்ட மரபு நூலிழையில் எந்தப் பகுதி அதிகளவில் பெறப்பட வேண்டுமோ அந்தப் பகுதியின் முடிவிலிருக்கும் நியூக்கிளியோட்டைட்டு தொடரியிலுள்ள (nucleotide sequence) தாங்கிகளுக்கு (bases) எதிரான தாங்கிகளைக் கொண்ட நியூக்கிளியோட்டைட்டு தொடரியைக் கொண்டதாக இருக்கும். இந்தத் தன்மையால் அவை மரபு நூலிழையில் இலகுவாக இணைந்து கொள்ள முடிகின்றது. இந்தத் தாக்கம் நிகழும் வெப்பநிலையானது முந்தொடர்களின் தன்மையில் தங்கியிருக்கும். அதாவது முந்தொடர்களிலுள்ள தாங்கிகளின் எண்ணிக்கை, வெவ்வேறு தாங்கிகளின் விகிதம் என்பவற்ரில் தங்கியிருக்கும்.
 
=== நீட்டித்தல் ===
இந்நிகழ்வில் மரபு நூலிழை பல்கி நகலாக பெருக்கப்படும் (Amplification). வெப்பநிலை 75–80°செ அமைக்கலாம். டி. என். ஏ. பாலிமரேசு நொதி உயர் வெப்பநிலையில் (எரிமலையில்) வாழும் பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதால், இந்நொதியின் செயற்பாடுகளுக்கு உகந்த வெப்பநிலை 75–80°செ ஆகும்<ref name="Chien et al.">{{cite journal|author=Chien A, Edgar DB, Trela JM|year= 1976|title=Deoxyribonucleic acid polymerase from the extreme thermophile Thermus aquaticus|journal=J. Bacteriol|volume=127|pages=1550–1557|pmid=8432|issue=3|pmc=232952}}</ref><ref name="Lawyer et al.">{{cite journal|author=Lawyer FC, Stoffel S, Saiki RK, Chang SY, Landre PA, Abramson RD, Gelfand DH.|year= 1993|title=High-level expression, purification, and enzymatic characterization of full-length Thermus aquaticus DNA polymerase and a truncated form deficient in 5' to 3' exonuclease activity.|journal=PCR Methods Appl.|volume=2|pages=275-87|pmid=8324500|issue=4|pmc=}}</ref>, குறைவான வெப்பநிலையில் இத்தகு பாலிமரேசு தொடர்வினைகள் சிறப்பாக நிகழ்வதில்லை.
 
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1619277" இருந்து மீள்விக்கப்பட்டது