"நுரையீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Lungs.gif|thumbnail|250px|நுரையீரல்கள். நடுவே தெரியும் குழாய் மூச்சுக்குழாய், அது இரு கிளைகளாகப் பிரிந்து நுரையீரலில் உள்ள நுண்ணறைகளுக்கு உள்ளிழுக்கப்பட்ட காற்றை எடுத்துச் செல்லுகின்றன]]
'''நுரையீரல்''' (Lung) என்பது [[உயிரினம்|உயிரினங்கள்]] மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு [[மூச்சுவிடல்]] என்று பெயர். [[வாயுப்பரிமாற்றம்]] இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] உள் எடுத்துக்கொள்வதற்கும் [[காபனீரொக்சைட்டு]] [[வளிமம்|வளிமத்தை]] வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 [[கன மீட்டர்]] (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.
 
[[மருத்துவம்|மருத்துவத்தில்]] பயன்படும் நுரையீரல் தொடர்பான [[இலத்தீன்]] அடிப்படைச் சொல் ''பல்மோ-'' (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய ''பல்மொனாரியசு'' (pulmonarius = "நுரையீரல் தொடர்பான") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற ''நியுமோ-'' (pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் ''ப்நியுமோன்'' (πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது.
386

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1619392" இருந்து மீள்விக்கப்பட்டது