தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின்படி தில்லியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கி.மு. இரண்டாவது [[ஆயிரவாண்டு]]களிலும் அதற்கு முன்னரும் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய இதிகாசமான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டவர்]]களின் தலைநகரமான [[இந்திரப்பிரஸ்தம்]] இப் பகுதியிலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. [[மௌரியப் பேரரசு]]க் காலத்தில் (கி.மு. 300) இக் குடியேற்றங்கள் வளர்ச்சியடைந்தன. ஏழு முக்கிய நகரங்களின் எச்சங்களை தில்லிப் பகுதியில் கண்டறிந்துள்ளனர். [[தொமாரா மரபு|தொமாரா மரபினர்]] கி.பி 736ல் லால் காட் என்னும் நகரத்தை நிறுவினர். [[சௌகான் ராஜபுத்திரர்]] அல்லது ஆஜ்மெர் என அழைக்கப்படுவோர் 1180ல் லால் காட் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை ''கிலா ராய் பித்தோரா'' எனப் பெயர் மாற்றினர். சௌகான் அரசர் [[மூன்றாம் பிரிதிவிராஜ்|மூன்றாம் பிரிதிவிராஜை]] 1192 ஆம் ஆண்டில் ஆப்கானியரான [[முகம்மத் கோரி]] தோற்கடித்தார். 1206 ஆம் ஆண்டில் [[குலாம் மரபு|குலாம் மரபைத்]] தொடக்கி வைத்த [[குதுப் உத்தீன் அய்பாக்]] தில்லி சுல்தானகத்தை நிறுவினார். குதுப் உத்தீன், [[குதுப் மினார்|குதுப் மினாரையும்]], [[குவாத் அல் இஸ்லாம்]] எனப்படும் இந்தியாவின் மிகப் பழைய [[பள்ளிவாசல்|பள்ளிவாசலையும்]] கட்டுவித்தார். குலாம் மரபினர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் [[கில்ஜி மரபு|கில்ஜி]], [[துக்ளக் மரபு|துக்ளக்]], [[சய்யித் மரபு|சய்யித்]], [[லோடி மரபு|லோடி]] ஆகிய [[துருக்கி]]யையும், [[நடு ஆசியா]]வையும் சேர்ந்த மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் தில்லியில் உள்ள ஏழு நகரங்களுள் அடங்கும் பல [[கோட்டை]]களையும், நகரப் பகுதிகளையும் அமைத்தனர். தில்லியின் முஸ்லிம் சுல்தான்கள் தமது இந்துக் குடிமக்களிடம் தாராளமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு [[திமூர் லெங்க்]] எனப்படுவோர் 1398ல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தில்லிக்குள் புகுந்த அவர்கள் அதனை அழித்தனர். தில்லி சுல்தான்களின் காலத்தில் தில்லி, [[சூபிசம்|சூபியத்தின்]] முக்கிய மையமாக விளங்கியது. 1526 ஆம் ஆண்டில், [[சாகிருத்தீன் பாபர்]], [[பானிபட் போர் (1526)|முதலாம் பானிப்பட் போரில்]], லோடி மரபின் கடைசி சுல்தானை வென்று [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] நிறுவினார். தில்லி, [[ஆக்ரா]], [[லாகூர்]] ஆகியவை இப் பேரரசின் தலைநகரங்களாக விளங்கின.
 
முகலாயப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் [[ஷேர் ஷா சூரி]] என்பவரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி நீங்கலாக, வட இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் நிலை பெற்றிருந்தது. [[பேரரசர் அக்பர்]] தலைநகரை ஆக்ராவில் இருந்து தில்லிக்கு மாற்றினார். இன்று, பழைய தில்லி என்று பொதுவாக அழைக்கப்படும் தில்லியின் ஏழாவது நகரை அமைத்தவர் [[ஷாஜகான்|பேரரசர் சாஜகான்]] ஆவார். அப்போது அந் நகருக்கு பேரரசரின் பெயரைத் தழுவி [[சாஜகானாபாத்]] எனப் பெயரிடப்பட்டது. 1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், [[நாதர் ஷா]], [[கர்னால் போர்|கர்னால் போரில்]] முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு [[மயிலணை]] உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற [[மூன்றாம் பானிப்பட் போர்|மூன்றாம் பானிப்பட் போருக்குப்]] பின், [[அகமத் ஷா அப்தாலி]] தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் [[தில்லிப் போர்|தில்லிப் போரில்]] மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின.
 
1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், [[கல்கத்தா]], [[பிரித்தானிய இந்தியா]]வின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான [[எட்வின் லூட்யென்]] (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. [[இந்தியப் பிரிவினை]]யின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், [[சிந்து மாகாணம்|சிந்து]] ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு [[இந்து]]க்களும், [[சீக்கியர்கள்|சீக்கியரும்]] தில்லிக்குக் குடி பெயர்ந்தனர்.
 
இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), [[தில்லி தேசிய தலைநகரப் பகுதி]]யாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய [[சட்டசபைசட்டவாக்க (இந்தியா)அவை|சட்டசபை]] ஒன்றும் அமைக்கப்பட்டது.
 
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. டிசம்பர் 2001ல், [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றக் கட்டிடம்]] காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட இத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்ததாக இந்தியா கருதியது. தொடர்ந்து அக்டோபர் 2005 ஆம் ஆண்டில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 62 குடிமக்களும், செப்டெம்பர் 2008 இல் நிகழ்ந்த இது போன்ற இன்னொரு தாக்குதலில் 30 குடிமக்களும் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது