பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செயல்முறை: *விரிவாக்கம்*
→‎செயல்முறை: *விரிவாக்கம்*
வரிசை 21:
 
==செயல்முறை==
மரபு நூலிழையில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பெருக்குவதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது. இலக்குப் பகுதியானது பொதுவாக 0.1-10 கிலோ தாங்கிச் சோடிகளைக் (kilo base pairs - kb) கொண்டதாக இருக்கும். ஆனாலும் ஒரு சில தாக்கங்கள் 40 கிலோ தாங்கிச் சோடிகள் வரை பெருக்கும் தன்மை கொண்டன.<ref>{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC44063/ | title=Effective amplification of long targets from cloned inserts and human genomic DNA | publisher=NCBI | work=Proceedings of the National Academy of Sciences of the United States of America | date=1994 June 7 | accessdate=பெப்ரவரி 16, 2014 | author=S Cheng, C Fockler, W M Barnes, and R Higuchi | pages=91(12): 5695–5699}}</ref> குறிப்பிட்ட பகுதியின் பெருக்கமானது வழங்கப்படும் பொருட்களின் அளவில் தங்கியிருக்கும். செயற்பாட்டிற்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் ஒரு வரம்பிற்குள் இருப்பதனால், செயற்பாடும் ஒரு நிலைக்குப் பின்னர் நின்றுவிடும்<ref>{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3365123/ | title=Robust Quantification of Polymerase Chain Reactions Using Global Fitting | publisher=NCBI | work=PLoS One. | date=2012 May 31 | accessdate=பெப்ரவரி 16, 2014 | author=Ana C. Carr and Sean D. Moore* | pages=7(5)}}</ref>. தாக்கம் நிகழும் கலவையின் கனவளவானது 20μL - 200μL வரை வேறுபடும். <ref name="BABEC">{{cite web | url=http://www.babec.org/files/PCR_2012/PCR_Optimization_Student_Guide_2012.pdf | title=PCR Optimization Student Guide, Fall 2012 | publisher=Applied Biosystems | work=BABEC, | accessdate=பெப்ரவரி 17, 2014}}</ref>. இந்தக் கலவையானது 0.2–0.5 மி.லீ கனவளவுள்ள சோதனைக்குழாயில் எடுக்கப்பட்டு, வெப்பச் சுழற்சிக் (thermo cycler) கருவியொன்றினுள் தாக்கம் நிகழ்வதற்காக வைக்கப்படும். இந்தக் கருவி சோதனைக் குழாய்களை வெப்பத்தைக் கூட்டியும், குறைத்தும், ஒவ்வொரு படிநிலையிலும் தாக்கத்திற்குத் தேவையான வெப்பத்தை வழங்குகின்றது. மிக மெல்லிய சுவரைக் கொண்ட இந்தச் சோதனைக் குழாய்கள், மாறும் வெப்பத்தை இலகுவாகக் கலவைக்குக் கடத்துவதனால், கலவையில் நிகழ வேண்டிய வெப்ப மாற்றம் மிக விரைவாக நிகழ்ந்து, மிகவும் குறுகிய நேரத்தில் வெப்பச் சமநிலைக்கு வருவதற்கு உதவும்.
இந்த செயல்முறையானது, மீண்டும் மீண்டும், மாறி மாறி வரும் வெப்பநிலை மாற்றங்களை உள்ளடக்கிய பல சுழற்சிகளைக் கொண்ட செயல்முறையாகும். பொதுவாக 20-40 சுழற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். முதலில் ஆரம்பப் படிநிலையொன்றில், உயர் வெப்பநிலையில் (>90°செ)சில நிமிடங்கள் வைத்திருக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பாலிமரேசு_தொடர்_வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது