பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சேர்த்தல்: *விரிவாக்கம்*
→‎செயல்முறை: *விரிவாக்கம்*
வரிசை 25:
தாக்கம் நிகழும் கலவையின் கனவளவானது 20μL - 200μL வரை வேறுபடும். <ref name="BABEC">{{cite web | url=http://www.babec.org/files/PCR_2012/PCR_Optimization_Student_Guide_2012.pdf | title=PCR Optimization Student Guide, Fall 2012 | publisher=Applied Biosystems | work=BABEC, | accessdate=பெப்ரவரி 17, 2014}}</ref>. இந்தக் கலவையானது 0.2–0.5 மி.லீ கனவளவுள்ள சோதனைக்குழாயில் எடுக்கப்பட்டு, வெப்பச் சுழற்சிக் (thermo cycler) கருவியொன்றினுள் தாக்கம் நிகழ்வதற்காக வைக்கப்படும். இந்தக் கருவி சோதனைக் குழாய்களின் வெப்பத்தைக் கூட்டியும், குறைத்தும், ஒவ்வொரு படிநிலையிலும் தாக்கத்திற்குத் தேவையான வெப்பத்தை வழங்குகின்றது. மிக மெல்லிய சுவரைக் கொண்ட இந்தச் சோதனைக் குழாய்கள், மாறும் வெப்பத்தை இலகுவாகக் கலவைக்குக் கடத்துவதனால், கலவையில் நிகழ வேண்டிய வெப்ப மாற்றம் மிக விரைவாக நிகழ்ந்து, மிகவும் குறுகிய நேரத்தில் வெப்பச் சமநிலைக்கு வருவதற்கு உதவும். குழாய்களை மூடியிருக்கும் கருவியின் மூடி சூடாக வைத்திருக்கப்படுவதனால், மூடியில் ஒடுங்குதல் மூலம் கலவையின் நீர்மப் பொருட்கள் படிதல் தவிர்க்கப்படும்.
இந்த செயல்முறையின் முக்கிய படிநிலைகளான பிரித்தல், சேர்த்தல், நீட்டித்தல் ஆகிய மூன்றும், மீண்டும் மீண்டும், மாறி மாறி வரும் வெப்பநிலை மாற்றங்களை உள்ளடக்கிய பல சுழற்சிகளைக் கொண்ட செயல்முறையாகும். பொதுவாக 20-40 சுழற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வெப்பநிலைகளும், அவை பயன்படுத்தப்படும் நேரமும் பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கும். அவையாவன: பயன்படுத்தப்படும் நொதியின் தன்மை, கலவையினுள் இரு வலு அயனிகளினதும், டி.என்.டி.பி க்களினதும் (dNTPs) செறிவு, முன்தொடரிகளின் உருகுநிலை<ref>{{cite journal | author=Rychlik W, Spencer WJ, Rhoads RE| title=Optimization of the annealing temperature for DNA amplification in vitro| journal=Nucl Acids Res| year=1990 | pages=6409–6412|volume=18|pmid=2243783 | doi = 10.1093/nar/18.21.6409 | issue=21 | pmc=332522}}</ref>
===ஆரம்பப் படிநிலை===
முதலில் ஆரம்பப் படிநிலையொன்றில், உயர் வெப்பநிலையில் (>90°செ)சில நிமிடங்கள் (1-10 நிமிடங்கள்) வைத்திருக்கப்படும். பொதுவாக 94–96°செ க்கு வெப்பநிலை உயர்த்தப்படும். வெப்பநிலை மாற்றத்திற்கு மிகவும் அதிக தாங்குதன்மை கொண்டு நிலையாக இருக்கக்கூடிய டி. என். ஏ பாலிமரேசு நொதி பயன்படுத்தப்படுமாயின், வெப்பநிலை 98°செ வரைகூட உயர்த்தப்படும். இதன்மூலம் நொதியின் செயற்படுதிறன் தூண்டப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பாலிமரேசு_தொடர்_வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது