பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

262 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎செயல்முறை: *விரிவாக்கம்*
→‎செயல்முறை: *விரிவாக்கம்*
→‎செயல்முறை: *விரிவாக்கம்*
வரிசை 25:
தாக்கம் நிகழும் கலவையின் கனவளவானது 20μL - 200μL வரை வேறுபடும். <ref name="BABEC">{{cite web | url=http://www.babec.org/files/PCR_2012/PCR_Optimization_Student_Guide_2012.pdf | title=PCR Optimization Student Guide, Fall 2012 | publisher=Applied Biosystems | work=BABEC, | accessdate=பெப்ரவரி 17, 2014}}</ref>. இந்தக் கலவையானது 0.2–0.5 மி.லீ கனவளவுள்ள சோதனைக்குழாயில் எடுக்கப்பட்டு, வெப்பச் சுழற்சிக் (thermo cycler) கருவியொன்றினுள் தாக்கம் நிகழ்வதற்காக வைக்கப்படும். இந்தக் கருவி சோதனைக் குழாய்களின் வெப்பத்தைக் கூட்டியும், குறைத்தும், ஒவ்வொரு படிநிலையிலும் தாக்கத்திற்குத் தேவையான வெப்பத்தை வழங்குகின்றது. மிக மெல்லிய சுவரைக் கொண்ட இந்தச் சோதனைக் குழாய்கள், மாறும் வெப்பத்தை இலகுவாகக் கலவைக்குக் கடத்துவதனால், கலவையில் நிகழ வேண்டிய வெப்ப மாற்றம் மிக விரைவாக நிகழ்ந்து, மிகவும் குறுகிய நேரத்தில் வெப்பச் சமநிலைக்கு வருவதற்கு உதவும். குழாய்களை மூடியிருக்கும் கருவியின் மூடி சூடாக வைத்திருக்கப்படுவதனால், மூடியில் ஒடுங்குதல் மூலம் கலவையின் நீர்மப் பொருட்கள் படிதல் தவிர்க்கப்படும்.
இந்த செயல்முறையின் முக்கிய படிநிலைகளான பிரித்தல், சேர்த்தல், நீட்டித்தல் ஆகிய மூன்றும், மீண்டும் மீண்டும், மாறி மாறி வரும் வெப்பநிலை மாற்றங்களை உள்ளடக்கிய பல சுழற்சிகளைக் கொண்ட செயல்முறையாகும். பொதுவாக 20-40 சுழற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வெப்பநிலைகளும், அவை பயன்படுத்தப்படும் நேரமும் பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கும். அவையாவன: பயன்படுத்தப்படும் நொதியின் தன்மை, கலவையினுள் இரு வலு அயனிகளினதும், டி.என்.டி.பி க்களினதும் (dNTPs) செறிவு, முன்தொடரிகளின் உருகுநிலை (T<sub>m</sub>)<ref>{{cite journal | author=Rychlik W, Spencer WJ, Rhoads RE| title=Optimization of the annealing temperature for DNA amplification in vitro| journal=Nucl Acids Res| year=1990 | pages=6409–6412|volume=18|pmid=2243783 | doi = 10.1093/nar/18.21.6409 | issue=21 | pmc=332522}}</ref>
===ஆரம்பப் படிநிலை===
முதலில் ஆரம்பப் படிநிலையொன்றில், உயர் வெப்பநிலையில் (>90°செ)சில நிமிடங்கள் (1-10 நிமிடங்கள்) வைத்திருக்கப்படும். பொதுவாக 94–96°செ க்கு வெப்பநிலை உயர்த்தப்படும். வெப்பநிலை மாற்றத்திற்கு மிகவும் அதிக தாங்குதன்மை கொண்டு நிலையாக இருக்கக்கூடிய டி. என். ஏ பாலிமரேசு நொதி பயன்படுத்தப்படுமாயின், வெப்பநிலை 98°செ வரைகூட உயர்த்தப்படும். இதன்மூலம் நொதியின் செயற்படுதிறன் தூண்டப்படும்.
வரிசை 33:
 
=== சேர்த்தல் ===
இந்தப் படிநிலையில் வெப்பநிலையானது குறைக்கப்பட்டு, குளிராக்கப்படும். 50–65 °செ வெப்பநிலையில், கிட்டத்தட்ட 20–40 செக்கன்களுக்குக் கலவை பேணப்படும். இந்த வெப்பநிலையானது பொதுவாக முன்தொடரிகளின் உருகுநிலையை (T<sub>m</sub>) விட 3-5°செ குறைவாக இருக்கும்.
 
இந்நிகழ்வில் பிரிக்கப்பட்ட மரபு நூலிழைகள் ஒவ்வொன்றின் முடிவுப் பகுதியில், அவற்றிற்கென உருவாக்கப்பட்ட முன்தொடர்கள் (primers) இணைந்து கொள்ளும். இந்த முன்தொடர்கள், குறிப்பிட்ட மரபு நூலிழையில் எந்தப் பகுதி அதிகளவில் பெறப்பட வேண்டுமோ அந்தப் பகுதியின் முடிவிலிருக்கும் நியூக்கிளியோட்டைட்டு தொடரியிலுள்ள (nucleotide sequence) தாங்கிகளுக்கான (bases) குறைநிரப்பு (complementary) தாங்கிகளைக் கொண்ட நியூக்கிளியோட்டைட்டு தொடரியைக் கொண்டதாக இருக்கும். இந்தத் தன்மையால் அவை மரபு நூலிழையில் இலகுவாக இணைந்து கொள்ள முடிகின்றது. இந்தத் தாக்கம் நிகழும் வெப்பநிலையானது முன்தொடரிகளின் தன்மையில் தங்கியிருக்கும். அதாவது முன்தொடரிகளிலுள்ள தாங்கிகளின் எண்ணிக்கை, வெவ்வேறு தாங்கிகளின் விகிதம் என்பவற்றில் தங்கியிருக்கும்.
24,005

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1620083" இருந்து மீள்விக்கப்பட்டது