"மல்கம் எக்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26,975 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
[[படிமம்:Malcolm X NYWTS 2.jpg|thumb|right|மல்கம் X]]
'''மல்கம் எக்ஸ்''' (''Malcolm X'', [[மே 19]], [[1925]] - [[பெப்ரவரி 21]], [[1965]]) ஒரு குறிப்பிடத்தக்க [[ஆபிரிக்க அமெரிக்கர்]]. இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் [[இஸ்லாம் தேசம்|இஸ்லாம் தேசத்தின்]] பேச்சாளராக இருந்தவருமாவார். [[1964]] இல் [[இஸ்லாம் தேசம்|இஸ்லாம் தேசத்திலிருந்து]] விலகியபின் [[மக்கா]]வுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு [[சுணி முஸ்லிம்]] ஆனார். [[1965]] இல் படுகொலை செய்யப்பட்டார்.
 
[[1992]] இல் ''மல்கம் எக்ஸ்'' என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.
 
தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் ''மால்கம் எக்ஸ்'' எனும் நூலைத் தொகுத்துள்ளார்.
யார் இந்த மல்கம் எக்ஸ்?
இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் உசேன் ஒபாமாவிற்கு முன் அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர், இவர் பிறந்த காலத்தில் இறந்தவர், அவர்தான் Malcolm X.
மால்கம் மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அவருடைய ஆழ்ந்த அறிவு, விரிந்துக் காணப்பட்டு இருக்கும் அறிவு கேட்போரை பிரமிக்க செய்தது. அவருடைய பேச்சுகளை கெட்டு கறுப்பினர் மட்டும் அல்ல வெள்ளையர்களும் எப்படி ஓர் தனிமனிதனாக இப்படி பட்ட ஏராளமான மக்களை கவர முடிந்தது என்று வியந்தனர். மால்கமின் ஓர் சொல்லிற்கு
எண்ணற்று கறுப்பர்கள் பின்னால் நின்றார்கள்.
அவரின் ஆரம்ப காலத்தை எடுத்துக்கொண்டால், மல்கம் சமூக செயற்பாட்டாளருக்கு மகனாய்ப் பிறந்திருந்தாலும், அவரது தகப்பனார் வெள்ளையினத் துவேசக்காரர்களால் -விபத்து என்று சோடிக்கப்பட்டு- மல்கமின் இளவயதிலேயே கொல்லப்பட, மிகுந்த ஏழ்மையுடன் ஏனைய எட்டு சகோதர்களுடன் மல்கம் வளர்கின்றார். கணவரின் இறப்பு, வறுமை போன்றவற்றால் மல்கமின் தாயாரும் மனப்பிறழ்வுக்கு ஆளாக, மல்கமும் அவரது சகோதர்களும் வெவ்வேறு இடங்களில் வாழத்தொடங்குகின்றார்கள்.
 
இளவயதிலேயே வன்முறை, போதைமருந்துகடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு இருபதுகளின் ஆரம்பத்தில் மல்கத்திற்கு -ஒரு திருட்டுக் குற்றத்திற்காய்- பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. சிறையில் அறிமுகமான விரிவான புத்தக வாசிப்பால் மல்கம் ஆளுமை மிக்க மனிதராய் சிறைக்குள் வளர்கின்றார். அடிப்படைவாத கிறிஸ்தவம் கூட கறுப்பினத்தவர்களை ஒடுக்குகின்றது என்று தெளிந்து, அதற்கு மாற்றாய் இஸ்லாமை மல்கம் தேர்ந்தெடுகின்றார். இதற்கு வழிகாட்டியாக எலிஜா என்ற இஸ்லாமிய போதகர் மல்கத்திற்கு வாய்க்கின்றார். ஏழாண்டுகளின் பின் சிறையில் இருந்து வெளியே வருகின்ற மல்கம், தீவிரமாய் இஸ்லாமை கறுப்பின மக்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார். ஜநூறு அங்கத்துவர்களுடன் இருந்த நேசன் ஒஃப்வ் இஸ்லாம் மல்கமின் கடின உழைப்பால், பத்தாண்டுகளுக்குள் 30 000 மேற்ப்பட்டவர்களை அங்கத்துவராய்க்கொண்டு பிரமாண்டமாய் வளர்கின்றது. படிப்படியாக ஒரு ஆளுமைமிக மனிதவுரிமைச் செயற்பாட்டாளாராக மல்கம் உருவெடுக்கின்றார். கறுப்பர்களுக்கு என்று தனியான கல்வி பொருளாதாரம் இன்னபிற அடிப்படை வசதிகள் தேவை என்ற கறுப்பு தேசியத்தை மல்கம் கடுமையான மொழியில் முன்வைக்கின்றார். அதே நேரத்தில் மிகவும் கலகமான உரைகளின் மூலம் அடிமைப்படுக்கிடந்த கறுப்பின மக்களின் ஆன்மாவை விழிப்புறச்செய்கின்றார். இவற்றைத் தொடர்ந்து வெள்ளை இனத்துவேசவாதிகள் மட்டுமில்லை, அமெரிக்க அரசின் உளவுநிறுவனமும் மல்கமை கண்காணிக்கத் தொடங்குகின்றன. இந்தப்பொழுதுகளில் மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவின் தெற்குப்பகுதிகளில் அடிப்படை உரிமைகளை பேசி கருப்பின மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த, மலக்ம் எக்ஸ் அமெரிக்காவின் வடக்குப் பகுதியான நியூயோர்க்கில் கறுப்பின் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புகின்றார்.
இதற்கிடையில், ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட கறுப்பினமக்களின் கலாச்சார வேர்களை முழுதாக அறியச்செய்யாது இருப்பதற்கே, திட்டமிட்டு வெள்ளை இனத்தவர்கள் வேறு பெயர்களை கறுப்பினத்தவர்களுக்கு சூட்டி அழைக்கின்றார்கள் என்ற புரிதல் மல்கமிற்கு வருகின்றது.
இதன் இரகசியம் என்னவென்றால், உலகில் மற்ற இனத்தில் தங்களுடைய பெயர்களுடன் தங்கள் குடும்பப் பெயர் இணைந்திருக்கும். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கோ தங்களை அடிமையாக வைத்திருப்பவர்களின் பெயரை இணைக்க வேண்டும். ஒவ்வொரு கறுப்பின மனிதனுக்கும் விதிக்கப்பட்ட இக்கொடுமையை என்னவென்று விவரிப்பது?
மல்கம் எக்ஸ் [Malcolm X] கேட்கிறார். “நான் யாருக்கும் அடிமையில்லை
என் பெயருக்குப் பக்கத்தில் என்னை அடிமைப்படுத்தியவனின் பெயரை இணைக்க விரும்பவில்லை.”
அவ்வாறான வெள்ளையினத்தவர்களின் பெயர்களை மறுதலிப்பதற்காய், மல்கம், தனது லிட்டில் (Little) என்ற பெயரை எக்ஸ் (X) ஆக மாற்றுகின்றார். தொலைந்து போய்விட்ட தனது கலாச்சார வேரை, அந்த எக்ஸ் (X) என்ற எழுத்தில் அடையாளப்படுத்துகின்றார். அதன்பின் அமெரிக்க கறுப்பர்களில் பலபேர் எக்ஸ் (X) என்ற பெயர்க்ளைத் தங்களுக்குச் சூட்டிக்கொள்கின்றனர்.
இதற்கிடையில் வழிகாடியாக இருக்கும் எலிஜாவுடன் முரண்பாடுகள் மல்கமுக்கு வெடிக்கின்றன. தமது வழிகாட்டி கட்டுப்பாடாய் இருப்பார் என்று நினைத்த மல்கமிற்கு அந்த மதபோதகர் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மனைவியர்களையும் பல பிள்ளைகளையும் வைத்திருப்பது மல்கமிற்கு பிடிக்காது போகின்றது.
அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி கெனடி கொலை செய்யப்பட்டபோது மல்கம் கூறிய கருத்தை வைத்து எலிஜா, நேசன் ஒஃப்வ் இஸ்லாமில் இருந்து மல்கமை தற்காலிகமாய் நீக்குகின்றார். கெனடியின் கொலையின்போது மால்கம் கூறியது, ‘வினை விதைதவன் வினை அறுப்பான்’ என்ற அர்த்தத்தில் வரக்கூடியது. எனெனில் இந்தக் காலகட்டதில் வியட்நாம் போர் உக்கிரமாய் நட்ந்துகொண்டிருந்தது. மல்கம் எக்ஸ், மார்டி லூதர் கிங் உட்பட பல கறுப்பினத் தலைவர்கள் வியட்நாமிய போரை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.
இதேவேளை மல்கம் ஹஜ் யாத்திரை செல்கின்றார். அங்கே சந்திக்கும் கறுப்பு தோல அல்லாத மற்ற மக்களின் அன்பு மல்கம் இதுவரை முன்வைத்த கருத்துக்களில் இடையீடு செய்கின்றது. அதுவரை முற்றுமுழுதாக வெள்ளையின மக்கள் அனைவரையும் (சிலர் கறுப்பின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்ததையும் அலட்சியப்படுத்தி) விமர்சித்த மல்கம் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொள்ளாது, வெள்ளையினத்துவேசத்தை மட்டுமே முதன்மையாக வைத்து உரையாடத் தொடங்குகின்றார். கறுப்புத்தோல் அல்லாது, பிற தோல் இனத்தவர்களும் தமது போராட்டதில் இணைந்துகொள்ளலாம் என்று Organization of Afro-American Unity என்ற அமைப்பை கட்டியெழுப்புகின்றார். ஃபிடல் காஸ்ரோ நியூயோர்கில் ஐ.நா.சபையில் முதன்முதலாய் உரையாட வருகையிலும் கருப்பின் மக்கள் நிறைய வாழும் Harlem பகுதியிலேயே தங்குகின்றார். இருவேறு சித்தாந்தங்களை/நம்பிக்கைகளை இருவரும் கொண்டிருந்தாலும் ஃபிடல் மல்கமை சந்தித்து உரையாடி கறுப்பின் மக்களுக்கான போராட்டத்திற்கு தனது ஆதரவை தார்மீகபூர்வமாய் வழங்குகின்றார்.
திருமணம் மீது பெரிதாய் நம்பிக்கை இல்லாத மல்கம் பிறகு பெற்றியை (Betty) திருமணம் செய்கின்றார். எனினும் மல்கம் பெண்கள் மீதான முற்போக்கான கருத்துகள் எதையும் கொண்டிராது -ஒரு அடிப்படை மதவாதியைப் போல இருந்தது- மல்கமின் ஆளுமையில் முக்கிய குறைபாடு என்றுதான் சொல்லவேண்டும். எனினும் கறுப்பின் மக்களின் தலைமைக்கான தகுதியை மல்கம் கொண்டிருந்தார் என்பதை -இதைவைத்து- மறுக்கவும் முடியாது.
Nation of Islam மை பிரிந்த பின்னும் மல்கமின் வளர்ச்சியை எலிஜாவினால் தடுக்கமுடியாது போகின்றது. அதேசமயத்தில் சட்டத்தின் அப்பாற்பட்ட தனது முறையற்ற மனைவியர் பற்றிய செய்தியை மூடிமறைப்பதற்கான ஒத்துழைப்பை எலிஜா கேட்டபோதும் மல்கம் மறுத்துவிடுகின்றார் என்பது இன்னும் எலிஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. 1965ம் ஆண்டு ஒரு அரங்கில் மல்கம் பேசிக்கொண்டிருக்கும்போது எலிஜாவின் ஆதரவாளர்களால் மல்கம் கொல்லப்படுகின்றார். எலிஜாவின் ஆதரவாளர்களால் இக்கொலை செய்யப்படாலும் இதன் பின்னணியில் அமெரிக்கா உளவுநிறுவனங்களின் ‘சுத்தமான’ கைகளும் இருந்ததாகவும் நம்பப்படுகின்றது. மல்கமை உளவு பார்த்துப் பார்த்தே ஏழாயிரம் பக்கங்களுக்கு மேலான பக்கங்கள் உளவுத் துறையில் சேகரிக்கப்படது கவனத்தில் கொள்ளக்கூடியது.
மல்கம் திடீரென்று கொலை செய்யப்பட்டவர் அல்ல. மல்கமிற்கு தனது சாவு மிக நெருக்கத்தில் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும் களப்பணி ஆற்றுவதில் பின்னிற்கவில்லை. மல்கம் 65ல்கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட பல கொலை முயற்சிகள் நட்ந்திருக்கின்றன. அவரது காருக்கு குண்டு வைக்க முயற்சித்தது, வீட்டை தீயிட்டு கொளுத்தியது என்று பல ஆபத்துக்களில் இருந்து மல்கம் தப்பியுமிருக்கின்றார். கலகக்காரனாய் இருந்த மல்கமிற்கு மட்டுமில்லை, காந்தியை தன் ஆதர்சமாய் வரிந்துகொண்டு வன்முறைப் போராட்டங்களை தொடர்ந்து நிராகரித்தபடி இருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்கும் பரிசாக துப்பாகி வேட்டுக்களே வரலாற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது.
மல்கம் எக்ஸ் (1965), மார்ட்டின் லூதர் கிங் (1968) இரண்டு முக்கிய கறுப்பின் தலைவர்களையும் அடுத்தடுத்து மூன்றாண்டுகளுக்குள் கறுப்பின் மக்கள் இழக்கின்றனர். இவர்கள் இருவரின் மிக்ப்பெரும் எழுச்சியானது, இனி மனிதவுரிமைகள் பேசும் எந்தத் தலைவரையும் பிரமாண்டமாய் வளர்ந்துவிடச்செய்யக்கூடாது என்பதில் 2009 வரை அமெரிக்க அரசு மிகுந்த கண்காணிப்புடன் இருந்தது.
ரவிக்குமாரின் ‘மால்கம் எக்ஸ்’ நூலை எழுதும்போது,
“அதனாலேயே இற்றைய மிகு நெருக்கடி காலத்திலும் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் போலவோ, மல்கம் எக்ஸ் போலவே ஒருவர் உருவாக முடியாது உள்ளது. ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு (கறுப்பின, ஸ்பானிய, பூர்வீககுடிகளுக்கு, 9/11 ற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு) தங்கள் உரிமைகளுக்காய் போராட வேண்டியபயணமோ மிகவும் நீண்டதாய் இருக்கின்றது”, என்று குறிப்பிடுள்ளார்.
ஆனால் இன்றோ ஓர் கறுப்பின இஸ்லாமிய தகப்பனிற்கு பிறந்தவர் அதே அமெரிக்காவின் ஜனதிபதியாகியுளார்.
மால்கமின் பேச்சைப் பார்த்து விடுதலைக்கு போராடிய ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் மற்றும் பாலுஸ்தீன விடுதலை இயக்கம் அவரை தம் தம் நாடுகளில் பேச அழைத்து அவரை அங்கீரித்த காரணத்தால் அவர் உலகத் தலைவர் வரிசையில் இடம் பிடித்தார்.
மால்கம் வாழ்க்கை முழுவதுமே புரட்சிதான்.
“புரட்சி என்பது ரத்தம் சிந்துவது,
புரட்சி என்பது சமரசமற்றது,
புரட்சி என்பது தனது பாதையில் எதிர்படும் அனைத்தும் தலைகீழாக புரட்டி போடுவது…”
அப்படிதான் மால்கமும் வாழ்ந்து வந்தார்.
மால்கம் ஓர் கறுப்பின போராளி மட்டும் அல்ல,
பணிய மறுத்து நிமிரும் தலைகளில், மால்கமின் தலை இருக்கிறது,
அடங்க மறுத்து வெளிபடும் குரல்களில், மால்கமின் குரல் இருக்கிறது,
தாழ மறுத்து உயரும் கரங்களில், மால்கமின் கரங்கள் இருக்கிறது…..
அமெரிக்க கறுப்பின மக்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் (Martin luther King) காலத்தில் வாழ்ந்த சமகாலத்தவர் தான் மல்கம் எக்ஸ். இருவரின் பாதையும் வெவ்வேறு திசை நோக்கியதாக இருந்தது. இருவரும் மார்ச் 26.1964-இல் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்திருக்கின்றனர். அதுவும் சில நொடிகள் மட்டுமே. மல்கம் எக்ஸ் வன்முறையை தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. மார்ட்டின் லூதர் கிங் அணுகுமுறை மாறுபட்டிருந்தாலும் இவரும் சுட்டுக் கொல்லப்பட்டார் மல்கம் எக்ஸ் போலவே…
நம்முடைய கேள்வி, ´மல்கம் எக்ஸ் வன்முறையை தூண்டினாரா?´ என்பதற்கான தேடல்…
அமெரிக்கா முழுவதும் வெள்ளை இனவெறியைச் சேர்ந்த அமைப்புக்கள் பல இருந்தன. ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கொல்வது, அவர்களிடம் கொள்ளையடிப்பது, உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்துவது, பெண்களை வல்லுறவு செய்வது என வன்முறைகளில் ஈடுபட்ட காலங்கள் அவை.
´ஒமஹா´ [Omaha] மாநகரத்தைச் சேர்ந்த மல்கம் எக்ஸ் அந்தப் பகுதியைச் சேர்ந்த ´பிளாக் லெஜியிஓன்´ [Black legion] இனவெறி குழுவால் அதிகம் பாதிப்பிற்குள்ளானவர். இவர் அப்பாவின் 3-தம்பிகள் இக்குழுக்களால் இனவெறி காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
´ஒமஹா´வில் [Omaha] ´நெப்ராஸ்கா´ [Nebraska] என்னும் ஊரில் ´மல்கம் எக்ஸ்´ இன் அப்பா 1931-இல் இனவெறிக்காரணமாக காரில் மோதவிட்டு கொலை செய்தார்கள். அப்போது ´மல்கம் எக்ஸ்´ வயது 6.
ஆனால், காரில் மோதி இறந்தது ஆக்ஸிடென்ட் என்று அவ்வூர் போலீசார் மரண சான்றிதழ் கொடுத்ததால் இன்சூரன்ஸ் கூட ´மல்கம் எக்ஸ்´ குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. இவருடைய குடும்பத்தில் மட்டும் இப்படிப்பட்ட கொடுமைகள் இல்லை. ஒவ்வொரு ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குடும்பங்களிலும் பல சோக நிகழ்வுகள் இருந்தன.
எந்த வருமானமும் இல்லாமல் ´மல்கம் எக்ஸ்´ அம்மா குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். தன் கணவனின் மரணம் திட்டமிட்ட படுகொலை என்று எவ்வளவு வாதாடியும் பலனில்லாமல் போய்விட்டது. அதுவே அவருக்குள் மனபாதிப்பை ஏற்படுththukirathu.
[[பகுப்பு:ஆபிரிக்க-அமெரிக்க சமூக உரிமை இயக்கம்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1621159" இருந்து மீள்விக்கப்பட்டது