வானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Moon Dedal crater.jpg|thumb|right|250px|சந்திர வானியல்: [[பூமி]]யின் [[இயற்கைத் துணைக்கோள்|துணைக்கோளா]]ன [[நிலா|சந்திரனு]]டைய பின்பக்கம். படத்தில் காணப்படும் பெரிய பள்ளம், பள்ளம்-308 ஆகும். 30 கிமீ (19 மைல்) விட்டமுள்ள இப் பள்ளம், 1969 ல், சந்திரனைச் சுற்றி வரும்போது, [[அப்பல்லோ 11]] ஆய்வுப்பயணிகளால் படம் பிடிக்கப்பட்டது.]]
 
'''வானியல்''' (''AstronomyTranslate this shit into english now.....goddamn it!'') என்பது விண்பொருட்கள் (அதாவது [[இயற்கைத் துணைக்கோள்]]கள், [[கோள்]]கள், [[விண்மீன்]]கள், [[நெபுலா|விண்முகில்]]கள் மற்றும் [[விண்மீன் பேரடை]]கள்) பற்றியும், அவற்றின் [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[கணிதம்]] மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு]], [[காமா கதிர் வெடிப்பு]], விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) [[அவதானிப்பு வானியல்|அவதானிப்பதிலும்]], விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான [[அண்டவியல்]] என்பது [[அண்டம்|அண்ட]]த்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும்.<ref>{{cite book|last=Unsöld|year=2001|coauthors=Baschek|page=1|chapter=Introduction}}</ref>
 
வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு [[தொலைநோக்கி]]யின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் [[நாட்காட்டி]] தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், [[வானியற்பியல்|வானியற்பியலுடன்]] தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது [[வானியற்பியல்|வானியற்பிய]]லையே குறிக்கின்றது.<ref>{{cite book|last=Unsöld|year=2001|coauthors=Baschek|pages=6–9|chapter=I. Classical Astronomy and the Solar System}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வானியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது