பண்டிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி copy > paste
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{merge to|திருவிழா}}
'''பண்டிகை''' அல்லது '''சமய விழா''' அல்லது '''திருநாள்''' [[சமயம்|சமயத்துடன்]] தொடர்புடையது. பல சமயத்தினரும் தங்கள் நம்பிக்கைகளுக்கேற்ப கொண்டாடும் அவர்களது சமய தெய்வங்கள்/தேவ தூதர்கள்/புனிதர்களின் சிறப்பு நாட்களைக் குறிப்பதாகும். இவை அவர்களது சமய நாட்காட்டியில் குறிப்பிட்ட வானியல் நிலைகளுக்கேற்ப அறிவிக்கப்படுகின்றன.

==இந்து சமய விழாக்கள், பண்டிகைகள்==
தீபாவளி
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்திய நரக சதுர்த்தசி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு. தீமைகள் அகன்று உலக மக்கள் நன்மை பெற்ற நாள் இந்நாள்.

மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன். பூமாதேவி அவனைச்சிறந்த முறையில் வளர்த்து வந்தாள். நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொடுத்து, அதை தினமும் ஜபம் செய்யவும் பயிற்சி அளித்தாள். இறைவனுக்கு மகனாகப் பிறந்திருந்த போதும், நரகாசுரனிடம் அசுர குணம் தலைத்தூக்கியது. தாயின் கட்டுப்பாட்டிலிருந்து வெளி உலகிற்கு வந்து அசுர்களுடன் சேர்ந்து பலவித போர் பயிற்சிகளையும் பெற்றான்.
தன் தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்ற வரத்தைப் பிரமாவிடமிருந்து பெற்ற நரகாசுரன் ஆணவச் செருக்கினால் மக்களைப் பலவாறு துன்புறுத்தினான். தவம் செய்யும் முனிவர்கள், தவச்சீலர்கள், தேவர்கள் என எவருமே அவனுடைய கொடுமைகளிலிருந்து தப்ப முடியவில்லை. அவனுடைய கொடுமைகள் அதிகம் ஆனதால் அதற்கும், அவனுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய நேரம் நெருங்கியது. தேவர்களின் தலைவன் இந்திரன், கிருஷ்ணரிடம் சென்று நரகாசுரனின் கொடுமைகளைக் கூறி முறையிட்டார். ஸ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனுடன் போர் புரியச் சென்றார். அவரது தேருக்குச் சாரதியாக பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா இருந்தார். போர் கடுமையாக நடந்தது.

இருவரும் பலவித அஷ்திரங்களை ஏவுவதும், தடுத்து நிறுத்துவதுமாக இருந்தனர். அந்தச் சமயத்தில், நரகாசுரன் எய்த அம்பு பட்டு மயக்கமடைந்த கிருஷ்ணர் தேரிலேயே சரிந்தார். இதைக்கண்டு சாரதியாகச் சென்ற சத்தியபாமா, தானே வில்லை ஏந்தினார். தன் தாயின் அன்புக்கு அடிபணியாது அசுரனான நரகாசுரன் அவளின் அம்புக்கு இரையானான். பிராம்மாவிடம் தான் பெற்ற வரப்படி தன் தாயாலேயே மரணமடைந்தான். தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளிப் பண்டிகையின் விசேஷம். அறம் தவறாது இருப்பது மனித குணம். அதைத் தவறி நடப்பவன் மகனே ஆனாலும் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதால் பெற்ற தாயே போரிட்டுக் கொன்றாள்.
தன் தாயின் அம்புக்கு அடிப்பட்டு வீழ்ந்த நரகாசுரன் தவறுக்கு வருந்தியதோடு தன்னுடைய இறந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என வேண்டிக் கேட்டான். அவனுடைய பெற்றோர்களும் அதை அங்கீகரித்தனர். மக்களும், மற்றோரும் அசுரனின் துன்பங்களிலிருந்து விடுப்பட்ட நாளை, அவன் விருப்பப்படியே “ தீபாவளி” பண்டிகையாக நாம் கொண்டாடுகின்றோம்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வீடுகள் தூய்மைப்படுத்தப்படும்; முருக்கு, கல்லுருண்டை, லட்டு, போன்ற பலவகையான பலகாரங்கள் செய்யப்படும். தீபாவளி அன்று அணிவதற்காகப் புத்தாடைகள் வாங்கப்படும். தீபாவளி வாழ்த்து அட்டைகளும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு முன்னோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் வழிபாடு நடக்கும். இவ்வழிபாட்டில் முன்னோர்களின் உருவப் படங்களை வைத்து அங்கு அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளைப் படையலிட்டுப் பூஜைகள் செய்வர்.

தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய்யைத் தலையில் வைத்து கதகதப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரானாலும், குழாய் நீர் ஆனாலும், கிணற்று நீர் ஆனாலும் அதில் தீபாவளி அன்று கங்கை பிரசன்னம் ஆவதாக ஐதீகம்.
பின்னர் வீட்டிலுள்ள பூஜை அறையில் திருமால், மகாலெஷ்மி ஆகிய படங்களின் முன் புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி வைக்க வேண்டும். அன்று செய்த பலகாரங்களையும், இனிப்புப் பண்டங்களையும் நெய் வேத்தியமாகப் படைத்து, பூஜைகள் செய்து திருமாலையும், மகாலெஷ்மியையும் வணங்கி, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று புத்தாடைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் குடும்ப உறுப்பினர்கள் புத்தாடைகள் அணிந்து அனைவரும் ஒன்றாக ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வழிபாடு செய்வர். பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இறைவனுக்கு நெய்வேத்தியமாகப் படைத்தவைகளையும் பலகாரங்களையும் சாப்பிடுவார்கள். பண்டிகை நாளில் உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோரின் இல்லங்களுக்குச் செல்வதும், அவர்கள் நம் வீட்டிற்கு வருகை புரிவதும்; பெற்றோர்களும் பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்குப் பண அன்பளிப்பு கொடுப்பதும்; பட்டாசு, மத்தாப்பு, வானவேடிக்கைகள் விளையாடுவதும் தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு அம்சங்களாகும். தற்போது தீபாவளியன்று திரையரங்குகளுக்குச் செல்வதை வழக்கமாக்கி அதை வாழ்க்கை முறையில் ஒன்றாகவும் ஆக்கிவிட்டோம்.

===இந்து சமயத்தில் பண்டிகைகள் ஏன்?===

பண்டிகைகள் குடும்பத்துடன் பொழுதை குதூகலமாக கழிப்பதற்கும், புதிய ஆடைகள் உடுத்தவும், நல்ல தின்பண்டங்களை ருசிக்கவும், பட்டாசுகள் வெடிக்கவும், உல்லாச பயணங்கள் போகவும் ஒரு வாய்ப்பை கொடுக்கின்றன.

இவை உலகியல் ரீதியான கொண்டாட்டங்கள். இவ்வாறு கொண்டாடுவதில் தவறில்லை. இவற்றைச் செய்யாதே என எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. (செய் என்றும் சொல்லவில்லை).

தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகள் பற்றி புராணங்களிலேயும், பொங்கல் போன்ற பண்டிகைகள் பற்றி இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ளன. ஆகவே பண்டிகைகள் சமயத்துடன் தொடர்புடையன.

சநாதன தர்மத்தின் படி உயிர்கள் பகவானை அடைவதற்காகவே பிறவிகள் எடுத்து தங்கள் பாவங்களை போக்கி முக்தி நிலையை நோக்கி பயணிக்கின்றன.

ஆகவே பண்டிகைகளும் இதன் ஒரு பகுதியாக அமைகின்றன.

ஜீவாத்மா பரமாத்மாவை அடைவதற்கு பின்வரும் வழிகள் சொல்லப் படுகின்றன.

1. தியானம், யோகம், தவம் முதலியவை

2. நாம சங்கீர்த்தனம், தானம், உபவாசம், க்ஷேத்ராடனம் (தீர்த்த யாத்திரை)

3. பண்டிகைகள்

முதலாவது - ஞானிகள், யோகிகள் போன்றவர்களுக்கே முடியும் என நாமே முடிவு செய்து கொள்ளுகிறோம்.

இரண்டாவது - நம்மில் சிலரால் முடிகிறது.

மூன்றாவது - எல்லோருக்கும் சாத்தியமானது.

ஒரு கலைவிழா அல்லது சொற்பொழிவுக்கு போகிறீர்கள். கூடவே உங்கள் சிறு வயது பையனையோ பெண்ணையோ அழைத்துப் போகிறீர்கள். 2 மணி நேர நிகழ்ச்சியாக இருந்தால் நீங்கள் அதை முழுமையாக இருந்து பார்ப்பீர்கள், ஆனால் குழந்தை கொஞ்ச நேரம் நிகழ்ச்சியை பார்க்கும், பின்னர் மண்டபத்திலே என்னென்ன அலங்காரம் இருக்கிறதோ அவற்றைப் பார்க்கும், பின்னர் வந்திருப்பவர்களை பார்க்கும், எல்லாம் பார்த்து முடிந்ததும் சுகமாக உங்கள் மடியில் படுத்து தூங்கிவிடும்.

முதலாவது வழி பெரியவர்களைப் போன்றது. எது நோக்கமோ அதை செய்வது.

இரண்டாவது வழி குழந்தைகளைப் போன்றது. கொஞ்சம் நோக்கம், கொஞ்சம் பொழுதுபோக்கு, கொஞ்சம் சுகம்.

பண்டிகைகள் பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் எல்லாராலும் கொண்டாடப்படுவது.

ஆனால் இன்றைய உலகில் பண்டிகையின் நோக்கம் பற்றி பெரும்பாலானோர் கவலைப் படுவதில்லை. அதிலும் பெரும்பாலானோருக்கு என்ன நோக்கம் என்பதே தெரியாது.

முதலிரண்டு வழிகளைப் போலவே பண்டிகைகளும் இறைவனை அடைவதற்கு ஒரு வழியாகவே ஏற்படுத்தப் பட்டவை.

சில சமயங்களில் மருந்தை இனிப்புக்கு நடுவில் வைத்து கொடுப்பதில்லையா? அதுபோல பிரம்மத் தியானத்தை பண்டிகைக்குள் வைத்து நம் முன்னோர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இனிப்புடன் சேர்த்து மருந்தையும் நாம் உண்டால் தான் நோய் நம்மை விட்டுப் போகும்.

கொண்டாட்டங்களுடன் பிரம்மத் தியானம் (இறை பக்தி) சேர்ந்தால் தான் பிறவி எனும் நோயிலிருந்து விடுபட்டு பரப் பிரம்மத்தை அடையலாம்.

எனவே பண்டிகைகளின்போது உடலை தூய்மைப் படுத்தி, புத்தாடை உடுத்தி, (ஆலயம் சென்று) கடவுளை வணங்கி பூஜை செய்து, வீட்டில் பெரியவர்களை நமஸ்காரம் பண்ணி, இனிய தின்பண்டங்களை நாம் உண்பதுடன் சுற்றத்தாருக்கும் இயலாதவர்களுக்கும் கொடுத்து, அளவாகவும், ஜாக்கிரதையாகவும் பட்டாசு வெடித்து, உல்லாசமாக விழாக்களுக்கோ, கலை நிகழ்ச்சிகளுக்கோ, வெளியிடங்களுக்கோ சென்று சந்தோஷமாக கொண்டாடுவோம்.

==கிறித்துவத் திருநாட்கள்==

==இசுலாமியப் பண்டிகைகள்==

[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது