யப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 117:
== பண்பாடு ==
[[படிமம்:Maiko at Miyako Odori.jpg|செர்ரி மஞ்சரி(cherry blossom) நடனக்காட்சி|370px|thumb]]
ஹனாமி (花見 ) என்றழைக்கப்படும் "பூப் பார்த்தல் " வழக்கத்தை சப்பானியர்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகிறார்கள். இளவேனிற்காலத்தின் ஆரம்பத்தில் செர்ரி என்ற ஒரு வகையான பூ சப்பானில் பூத்துக் குலுங்கும் . சப்பானின் பகுதிக்கு ஏற்றவாறு பூப் பூக்கும் காலம் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து மே முதல் வாரம் வரை மாறுபடும். ஊடகங்கள் பூப்பூக்கும் காலநிலையை கணித்து கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பூத்துக் குலுங்கும் இடம் பற்றிய விவரங்களையும் வெளியிடுகின்றனர்.சப்பானியர்கள் நண்பர்களுடன் அல்லது உடன் வேலை பார்ப்பவர்களுடன் அல்லது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று கண்டு கழிப்பர் . பூத்திருக்கும் மரங்களின் அடியில் கூட்டமாக அமர்ந்து கதை பேசி , இசை இசைத்து பாட்டு பாடி , நடனம் ஆடி , மது அருந்தி உணவு உண்டு பொழுது போக்குவர். பொதுவாக இது ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த பூக்கள் பூக்கும் பூங்காவில் பூத்திருக்கும் நேரங்களில் விடுமுறை நாட்களில் அமர்வதற்கு இடம் கிடைக்க கடினம். ஆதலால் முந்திய நாள் இரவே சென்று நல்ல இடம் பார்த்து அமரும் விரிப்புகளை விரித்து போட்டு எல்லைக்கையிறு கட்டி விட்டு வருவர். குழுவில் உள்ள இளையோரின் பொறுப்பு நல்ல அமரும் இடம் கண்டு பிடிப்பதாகும்.
=== மதங்கள் ===
[[சின்த்தோ]]வும், [[பௌத்தம்|புத்த மதமும்]] சப்பானின் முக்கிய மதங்களாகும். கிறித்துவ மதமும் சிறுபான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது