வை. மு. கோதைநாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 50:
வை.மு.கோ. மேடைகளில் பாடுவதன்றி பல பாட்டுகளையும் புனைந்துள்ளார். இவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் சமீபத்தில் 'இசை மார்க்கம்' என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. முப்பதுகளில் வை.மு.கோ வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார். அம்பா மனோஹரி, கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள இந்த கிருதிகள், கர்நாடக இசைப் பாடகர்களால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.
 
சுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோ.விற்காகவே தம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டைப் புனைந்ததாகவும், பின்னர் டி.கே. பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பது இன்னோர் செய்தி.<ref>சாருகேசி – ஹிந்து பத்திரிகையில் 13-2-2009</ref>

==விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு==
பத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமிருந்த வை.மு.கோ.வுக்கு அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு ஏற்பட்டது. தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு 1925-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்த போது வை.மு.கோதை நாயகி அம்மாள் காந்தியைச் சந்தித்தார். இந்நிகழ்வு வை.மு.கோவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காந்தியின் எளிமையான தோற்றமும், ஆராவாரமற்ற அவரது உறுதியான நாவன்மையும் அம்மையாரை மிகவும் கவர்ந்தது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட வை.மு.கோ. அதுமுதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார்.மங்கல நாணைத் தவிர ஆடம்பரமான அணிகலன்களைத் தவிர்த்து, வேறு நகைகளை அணிவதில்லை என்று உறுதி பூண்டு அதையும் இறுதி வரையில் கடைப்பிடித்தார். பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வை._மு._கோதைநாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது