மல்லி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 22:
 
'''மல்லி''' இத் தொடர் ஒவ்வொரு வாரமும் (திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு) [[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பப்படுகிறது. இத் தொடரில் நடிகை [[சோனியா அகர்வால்]] முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர். சிறுவர்களின் நிஜமான வாழ்க்கையைச் சொல்லும் கதைதான் மல்லி.
 
இந்த தொடருக்கு திரைக்கதை வசனம் தாமிரா எழுத, ஏ.ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிராங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ரமேஷ் கிருஷ்ணன் தயாரிக்க, ஏ.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.
 
==கதை சுருக்கம்==
காதலுக்காக குடும்பத்தினரை எதிர்த்துத் திருமணம் செய்தவர்கள் பிரசாத் - வினோதினி தம்பதி. இவர்களுக்குப் பிறந்த ஒரே குழந்தையான ஷிவானி அழகும் அறிவும் நிரம்பியவள். கட்டிடத் துறையில் பிரசாத்தும், கார்மெண்ட்ஸ் துறையில் வினோதினியும் கொடிகட்டிப் பறப்பதால், ஷிவானியை கவனிக்க நேரமின்றி தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் வினோதினியின் தந்தை இறந்துவிடவே, தாய் யமுனாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.
 
யமுனாவின் வருகை பிரசாத்துக்கும் ஷிவானிக்கும் பல வகைகளில் இடைஞ்சலாக இருக்கிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி உண்டாகிறது. இதனை எப்படித் தவிர்ப்பது என்று புரியாமல் தவிக்கிறாள் வினோதினி. பிரசாத்தின் அண்ணன் சிவகுருவின் குடும்பத்திலும் குழப்பம் உண்டாகிறது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சிவகுருவின் மனைவி லட்சுமி, குடும்பத்தைக் கவனிக்காமல் பிசினஸ் செய்வதாக வெளியே சுற்றுகிறாள். தனியே சுதந்திரமாக வாழும் பிரமிளா என்ற பெண்ணின் ஆலோசனையைக் கேட்டு, சொத்துக்களை தன்னுடைய பெயரில் எழுதிவைக்குமாறு கணவனிடம் சண்டை போடுகிறாள்.
 
இந்த நேரத்தில் ஷிவானிக்கு விளையாட்டுத் தோழனாக அறிமுகமாகிறான் சிறுவன் பாலா. அவனது இறந்துபோன தங்கை மல்லியைப் போல் ஷிவானி இருப்பதால், அவளுடன் அன்பாக பழகுகிறான். தன்னுடைய வீட்டுக்கும் அழைத்துச் செல்கிறான். மல்லியைப் போல் இருக்கும் ஷிவானி மீது பாலா குடும்பத்தினர் பாசத்தைப் பொழிகிறார்கள். எப்போதும் பாலா மீது பாசத்தைப் பொழியும் அவனது குடும்பத்தையும், தன்னை கண்டுகொள்ளாத அப்பா, அம்மாவையும் நினைத்துப் பார்க்கிறாள் ஷிவானி.
 
அந்த ஏக்கத்தில் தன்னை மல்லியாக நினைத்துக்கொண்டு, தனக்குள் பேசத் தொடங்குகிறாள்.பிரசாத்தின் கோபத்தைத் தாங்கமுடியாத வினோதினி, மனைவியை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் சிவகுரு, பாசம் கிடைக்காமல் மல்லியாக மாறும் ஷிவானி என 'மல்லி' மெகா தொடர் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுவென நகர இருக்கிறது.
 
== நடிகர்கள்==
* [[சோனியா அகர்வால்]]
* சேது டார்வின்
* தேனி முருகன்
* முரளி
* சுசித்ரா ஆனந்தன்
* கிருஷ்ணகுமாரி
* பேபி ஹரிணி
 
==பாடல் மற்றும் இசை ==
இந்த தொடருக்கு கவிஞர் யுகபாரதி பாடல் எழுத, ரமேஷ் விநாயகம் பாடலுக்கு இசையமைக்க, அரவிந்த் சித்தார்த் பின்னணி இசை அமைக்கிறார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மல்லி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது