தானுந்து விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 71 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 5:
=== தொடக்கம் ===
மிகப் பழைய காலத்தில் இருந்தே சில்லுகள் பூட்டிய வண்டிகளின் ஓட்டப்போட்டிகள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. [[மாட்டுவண்டி]]ப் போட்டிகள், [[குதிரைவண்டி]]ப் போட்டிகள் போன்றவை தற்போதும் நிகழ்வது உண்டு. [[பெட்ரோல்|பெட்ரோலில்]] இயங்கும் தானுந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததுமே தானுந்துப் போட்டிகளும் தொடங்கி விட்டன எனலாம். உலகின் முதல் தானுந்து ஓட்டப்போட்டியை பாரிஸ் வெளியீடான ''லெ வெலோசிப்பீட்'' என்பதன் சார்பில் அதன் தலைமை ஆசிரியர் மொன்சியர் போசியர் என்பவர் 1887 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ஒழுங்கு செய்தார். இப்போட்டி 2 கிலோமீட்டர் ஓட்டத் தூரத்தைக் கொண்டிருந்தது. ஜார்ஜ் பூட்டன் என்பவர், ஆல்பர்ட் என்பவருடன் சேர்ந்து தானே உருவாக்கிய தானுந்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். எனினும், இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு இவர் மட்டுமே வந்திருந்ததால் இதனைப் போட்டி என்று சொல்ல முடியாது. 1894 ஜூலை 22 ஆம் தேதி முதலாவது போட்டி என்று சொல்லத்தக்கதான நிகழ்வு ''[[லெ பெட்டிட் ஜர்னல்]]'' என்னும் இன்னொரு பாரிஸ் [[சஞ்சிகை]]யால் ஒழுங்கு செய்யப்பட்டது. இதுவும் ஒரு நம்பகத் தன்மைப் போட்டியாகவே ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் காம்டே டி டயன் என்பவர் முதலாவதாக வந்தாலும் பென்ஹார்ட் எட் லெவாசர் என்பவரே முதலிலில் வந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னர் 1895 ஆம் ஆண்டில் உண்மையான தானுந்துப் போட்டி என்று சொல்லத்தக்க போட்டி பிரான்சில் இடம் பெற்றது. எமிலி லெவாசர் என்பவர் ஓட்டத்தூரத்தை முதலில் கடந்தபோதும் அவருடைய தானுந்து விதிகளின் படி நான்கு இருக்கைத் தானுந்தாக இல்லாததால் அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.
== வகைகள்==
தானுந்து போட்டிகள் பல வகைகளாக நடைபெறுகின்றன.அவை
=== பார்முலா தானுந்து ஓட்டப்போட்டிகள்===
இவகை உலகில் உள்ள மிக பிரபலமான ஒற்றை இருக்கை கொண்ட தானுந்துகளின் ஓட்டப் போட்டியாகும்.இவற்றில் வாகனங்களின் சக்கரங்கள் மூடப்படாமல் வெளியில் இருக்கும்.மேலும் அதன் பின்பகுதியில் தரையை நோக்கி புவியீர்ப்பு விசையை அதிகப்படுத்தும் அமைப்புகள் இருக்கும்.பொதுவாக திறந்த சக்கர தானுந்து விளையாட்டே பார்முலா பந்தயம் எனப்படுகிறது.இவற்றில் பார்முலா 1,2,3 என பல வகைகள் இருக்கின்றன.
===சுற்றுலா தானுந்து ஓட்டப்போட்டிகள் ===
இவை பொதுவாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரே வகை வாகனங்களுக்கிடையே நடத்தப்படுபவையாகும்.ஒரே வகையை சேர்ந்தவையாதலால் அவை சிறிய அளவிலான வித்தியாசங்களையே கொண்டிருக்கும்.எனிவே இவ்வகை மிகவும் சுறுசுறுப்பாகவும் வெற்றி தோல்வி சிறிய வித்தியாசங்களை கொண்டதாகவும் இருக்கும்.
===பந்தய வாகன ஓட்டம்==
இந்தவகை ஓட்டப்போட்டிகள் பந்தயங்களுக்கென்றே உருவாக்கப்பட்டவையாகும்.இந்தவகை போட்டிகள் ''கிராண்ட் டார்சர்'' என்ற பொருளில் ஜி.டி என்று குறிக்கப்படும்.மேலும் இந்தவகை போட்டிகள் குறைந்தபட்சம் 1௦௦௦ கி.மீ அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட தூரத்திற்கு நடத்தப்படும்.மேலும் இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட ஓட்டுனர்களை கொண்ட அணியினர் பங்கேற்பார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:தானுந்து விளையாட்டுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து_விளையாட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது