யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
==நோக்கம்==
இதன் நூலாசிரியர் நூலின் முதற்பதிப்புக்கான முன்னுரையில், "இச்சிறுநூல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச் சரித்திர ஆராய்ச்சியையும், [[யாழ்ப்பாண வைபவமாலை]] எனும் பெரிய நூலின் உள்ளுறை ஆராய்ச்சியையும் கையாளுவது"<ref>வேலுப்பிள்ளை, க., ''யாழ்ப்பாண வைபவ விமரிசனம்'', 2003. முன்னுரை.</ref> என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை என்னும் நூலைப் பிற்காலத்தில் கிடைத்த சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்து உண்மை வரலாற்றை அறிவதே இந்த நூலின் நோக்கம் என்பது புலனாகிறது.
 
வைபவமாலை, அக்காலத்தில் இருந்த சில நூல்களையும், செவிவழிக்கதைகளையும் சான்றுகளாகக் கொண்டு, யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்து ஏறத்தாழ 175 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர் தலையீடு ஏற்பட்டதற்குப் பிந்திய வைபவமாலை தரும் வரலாறு செவிவழிக்கதைகளை ஆதாரமாகக் கொண்டது எனவும் அதனால் இக்காலம் குறித்த வைபவமாலையின் வரலாறு பிற்காலத்தில் அறியப்பட்ட போர்த்துக்கேயர் காலக் குறிப்புக்களுடன் முரண்படுவதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கருதுகிறார்.<ref>வேலுப்பிள்ளை, க., ''யாழ்ப்பாண வைபவ விமரிசனம்'', 2003. பக். 1.</ref> இதனால், இந்த நூல் எழுதிய காலத்தில் கிடைத்த போர்த்துக்கேயர் காலத்துத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தின் உண்மை வரலாற்றை அறிய நூலாசிரியர் முயன்றுள்ளார்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_வைபவ_விமரிசனம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது