தாயக் கட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது. இருப்பினும் இந்தியா வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை தமிழ் குறிப்பெயர்களாகும்.
 
# மாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சலியையும் பணையமாக்கிய [[சகுனி]]யின் வஞ்சக விளையாட்டகவும்,
== நான்முக தாயக் கட்டை ==
# [[நளவெண்பா]]வில் நளன் கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
# மேலும் அண்மைய ஆராய்ச்சிகளின் மூலம் மெக்ஸிகோவில் வாழ்ந்த மாயன்கள் இவ்விளையட்டை விளையாண்ட குகைச்சித்திரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
== நான்முக தாயக் கட்டை ==
நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.
 
== அறுமுக தாயக் கட்டை ==
 
அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்.
 
== புளியங்கொட்டைகள் ==
ஆறு புளியம் பழ விதைகள் (அ) புளியங்கொட்டைகள் ஒரு புறமாகத் தேய்க்கப்பட்டு, குலுக்கி தரையில் இடப்படும், வெளிறிய பகுதிகள் எண் அடையாளங்களைக் குறிக்கின்றன.
 
== பலவறை (அ) சோழி ==
கடல்வாழ் மெல்லுடலிகளின் ஓடுகள், பலவறைகள் அல்லது சோழிகள் எனப்படுகின்றன. இவையும் தாயங்களாக குலுக்கி தரையில் இடப்படும். ஆறு முதல் பன்னிரு சோழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
== வெளியிணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாயக்_கட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது