மனித தோல் நிறம் லேசான இளஞ்சிவப்பு, வெள்ளை சாயல்களை இருண்ட பழுப்பு இருந்து பல்வேறு மாறுபடும். மனித தோல் நிறமிகளை இயற்கையின் தேர்வாகும். மனித தோல் நிறமிகளானது முதன்மையாக அதன் உயிர்வேதியியல் விளைவுகள் கட்டுப்படுத்தவும்,புற ஊதா கதிர்கதோலினை ஊடுருவாமல், புற ஊதா கதிர் அளவு கட்டுப்படுத்த உருவாகியுள்ளது.
[[File:Coloured-family.jpg|right|thumb|370px| மனிதர்களின் தோலின் நிரமானது அந்நாட்டின் தட்பவெப்ப நிலையை பொறுத்தும் மாறுபடுகிறது. தோலின் நிறத்திலிருக்கும் பரந்த படவேறுபாட்டைக் காட்டும், தென்னாப்பிரிக்காவில் உள்ள விரிந்த குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள்.]]
'''மாந்தர்களின் தோல் நிறம்''' (''human skin color'') அடர் [[பழுப்பு]] நிறத்திலிருந்து மிதமான [[இளஞ்சிவப்பு]]-[[வெள்ளை]] [[நிறம்|நிறங்கள்]] வரை பலவிதங்களில் உள்ளன. [[தோல்]] நிறங்களில் வேறுபாடு உள்ளதற்கான காரணம் [[இயற்கைத் தேர்வு|இயற்கைத் தேர்வே]]. முக்கியமாக [[உயிர்வேதியியல்]] தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தோலை ஊடுருவும் [[புற ஊதாக்கதிர்]]களை ஒழுங்கு முறைப்படுத்தவே தோலில் நிறமாற்றத்திற்கான [[பரிணாமம்]] நிகழ்ந்தது<ref name=jabl1>{{cite book|last=Muehlenbein|first=Michael|title=Human Evolutionary Biology|year=2010|publisher=Cambridge University Press|pages=192–213}}</ref>.
பல விதமான காரணிகளால் [[மனிதர்|மனிதனுடைய]] தோல் நிறம் முடிவு செய்யப்பட்டாலும், முக்கிய காரணியாக இருப்பது [[மெலனின்]] எனும் நிறமியாகும்<ref name="தோலின் நிறம்">{{cite web | url=http://anthro.palomar.edu/adapt/adapt_4.htm | title=மெலனின் | publisher=Dennis O'Neil | accessdate=நவம்பர் 26, 2013}}</ref>. மெலனின் தோலின் உட்புறத்தில் இருக்கும் நிறமி அணுக்கள் (Melanocytes) எனப்படும் உயிரணுக்களில் உருவாகின்றன. மெலனினே கருமை தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முடிவு செய்கிறது. வெளிர் தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முக்கியமாக முடிவுசெய்வது அடித்தோலின் அடிப்புறத்தில் இருக்கும் நீல-வெள்ளை நிறமுடைய இணைப்புத் திசுவும், அடித்தோலின் நரம்புகளில் சுற்றி வரும் [[குருதிவளிக்காவி|இரத்த சிவப்பணுக்களே]].