மேற்கு சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==துவக்கம்==
[[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரி]]யின் ஆட்சியில் 1309 முதல் அவிஞ்ஞோன், பிரான்சில் இருந்த திருத்தந்தை [[உரோமை நகரம்|உரோமை நகருக்கு]] மீண்டும் வந்தார். இதனால் [[அவிஞ்ஞோன்]] திருத்தந்தை ஆட்சிக்காலம்|அவிஞ்ஞோன் ஆட்சிக்காலம்]] முடிவுக்கு வந்தது.<ref>J.N.D. Kelly, ''Oxford Dictionary of the Popes'', p. 227</ref> 1378இல் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியின் இறப்புக்குப்பின்பு உரோமையர்கள், ஒரு உரோமையரையே திருத்தந்தையாக தேர்வுசெய்ய கிளர்ச்சி செய்தனர். இதனால் 1378இல் [[நாபொலி]]யினரான பார்தலோமியோ பிரிக்னானோ [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் அர்பன்]] என தேர்வு செய்யப்பட்டார்.
 
ஆயினும் தேர்வானப்பின்பு இவர் பலவற்றை மாற்ற முயன்றதாலும், கடுங்கோபக்காரராக இருந்ததாலும், இவரைத்தேர்வு செய்த பல கர்தினால்கள் இவரைவிட்டுப்பிரிந்து அங்கனி என்னும் இடத்தில் ஒன்று கூடி ஜெனிவாவின் இராபர்ட்டை அதே ஆண்டு செப்டம்பர் 20அன்று இவருக்குப்போட்டியாக தேர்வுசெய்தனர். [[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்|ஏழாம் கிளமெண்ட்]] என்னும் பெயரினை ஏற்றார். இவர் திருப்பீடத்தை மீண்டும் அவிஞ்ஞோன் நகரிக்கே மாற்றம் செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது