அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 3:
'''அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்''' என்பது 1309 முதல் 1378 வரையான காலத்தின் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் ஏழு [[திருத்தந்தை]]யர்கள் [[உரோமை நகரம்|உரோமை நகரில்]] தங்கி ஆட்சிசெய்யும் வழக்கத்திற்கு மாறாக பிரான்சு நாட்டின் அவிஞ்ஞோன் நகரில் தங்கி ஆட்சி செய்த காலத்தைக்குறிக்கும்.<ref>''The Avignon Papacy'', P.N.R. Zutshi, '''The New Cambridge Medieval History: c. 1300-c. 1415''', Vol. VI, Ed. Michael Jones, (Cambridge University Press, 2000), 653.</ref> இது திருத்தந்தையின் ஆட்சிக்கும் பிரான்சு அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்தது.
 
பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னருக்கும் [[எட்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸுக்கும்]] மோதல் ஏற்பட்டது. எட்டாம் போனிஃபாஸின் மறைவுக்குப்பின்பு திருத்தந்தையான [[பதினொன்றாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|பதினொன்றாம் பெனடிக்ட்]] 8 மாதம் மட்டுமே ஆட்சி செய்தார். அவருக்குப்பின்பு பிரெஞ்சு நபரான [[ஐந்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|ஐந்தாம் கிளமெண்ட்]] 1305இல் திருத்தந்தையாக தேர்வானார். இவர் பிரான்சைவிட்டபிரான்சைவிட்டு உரோமைக்கு வர மறுத்து 1309இல் திருத்தந்தையின் அவையினை அவிஞ்ஞோன் நகருக்கு மாற்றினார். அவ்விடமே திருத்தந்தையின் இல்லமாக அடுத்த 67 ஆண்டுகளுக்கு இருந்தது.
 
இக்காலம் ''திருத்தந்தையின் பாபிலோனிய அடிமைக்காலம்'' என சிலரால் அழைக்கப்படுகின்றது.<ref>Adrian Hastings, Alistair Mason and Hugh S. Pyper, ''The Oxford Companion to Christian Thought'', (Oxford University Press, 2000), 227.</ref><ref>[http://www.newadvent.org/cathen/07056c.htm Catholic Encyclopaedia entry] para 7</ref> ஏழு [[திருத்தந்தை]]யர்கள் இவ்விடத்திலிருந்து திருச்சபையினை ஆண்டனர். இவர்கள் எழுவரும் பிரெஞ்சு நபர்கள் ஆவர்.<ref>Joseph F. Kelly, ''The Ecumenical Councils of the Catholic Church: A History'', (Liturgical Press, 2009), 104.</ref><ref>Eamon Duffy, ''Saints & Sinners: A History of the Popes'', (Yale University Press, 1997), 165.</ref> பிரான்சிலிருந்து ஆண்டதால் இவர்கள் அனைவரும் பிரான்சு அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்ளானார்கள். இறுதியாக செப்டம்பர் 13, 1376இல் [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரி]] அவிஞ்ஞோன் நகரினை விடுத்து ஜனவரி 17, 1377இல் உரோமைக்கு வந்து சேர்ந்தார். இதனால் அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.