மதுரை நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wiki13 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Yokishivamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 22:
==மதுரை நாயக்கர் வம்சம்==
முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவர் பின்னர் ஆட்சிக்கு வந்த [[திருமலை நாயக்கர்]] காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் [[இராணி மங்கம்மாள்]] குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் [[இராணி மீனாட்சி]]. 1732 இல் நாயக்க மன்னர் [[விஜயரங்க சொக்கநாத நாயக்கர்]] வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314660.htm சிற்றரசுகள்]</ref>
 
== மதுரை நாயக்கர்களின் மரபு ==
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ஆச்சாரியா திருமலா ராமச்சந்திரா என்பவர், 'மாமன்னர் திருமலை நாயக்கர்' 'கம்ம' இனத்தைச் சேர்ந்தவர் என்பதை சான்றுடன் விளக்கியுள்ளார்.{{cn}} மேலும் 'பெனுகொண்டா சரித்திரத்தில்' மதுரை நாயக்கர்களின் குடும்ப பெயர் 'பெம்மசானி' என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பெயர் கம்ம இனத்திற்கு மட்டுமே உரிய பெயராகும். தமிழகவாழ் கம்ம நாயக்கர்களின் வரலாறும் மதுரை நாயக்கர்களே இன்றைய கம்மவார்களின் முன்னோர்கள் எனத் தெளிவாகக் கூறுகின்றன. அவர் நெற்றியில் நாமம் அணியும் வழக்கம் கொண்டவர், வைணவத்தில் நாட்டம் கொண்டவர். மேலும், இராணி மங்கம்மாளின் பெயரை பெரும்பாலும் இன்று வரையில் சூட்டிமகிழும் ஒரே இனம் கம்ம இனம். மேலும், 'பாரதி' எனப்படும் பத்திரிக்கையிலும் 'கம்ம' இனத்தவர்கள் என சுட்டியுள்ளனர். இவை, மதுரை நாயக்கர்கள் கம்மவார்கள் என காட்டுகிறது. ஆயினும், க.அ நீலகண்ட சாஸ்திரி மதுரை நாயக்கர்களின் குலப்பெயர் 'பலிஜா' இனத்திலுள்ள 'கரிகப்பட்டி' என்று குறிப்பிட்டுள்ளார். அந்த குலப்பெயர் 'கம்ம' இனத்திலும் அதிகப்படியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் எழுத்தாளர்களான 'அ.கி பரந்தாமனார்' மற்றும் 'சு. வெங்கடேசன்' முதலானோர் மதுரை நாயக்கர்களை 'தொட்டிய/ராஜகம்பள' நாயக்கர்களாக காட்டியுள்ளனர். அந்த சமூகத்தினர் 'யாதவர்' எனப்படும் 'சந்திரவன்ஷி க்ஷத்ரிய' வம்சத்தவரின் கிளைசாதியினர் என்று 'எட்கர் தர்ஸ்டன்' எனப்படும் ஆங்கிலேயர் தனது 'தென்னிந்திய நாட்டின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கம்பளத்தார்கள் 'பலிஜா' (க்ஷத்ரியர் அல்லாத) இனத்தின் கிளைசாதியினர் என்று சிலர் பதிவேற்றுகின்றனர். தஞ்சை நாயக்கர்களின் குலப்பெயர் 'அல்லுரி' என்பதாகும். அப்பெயர் 'பலிஜா' உள்ளிட்ட வெவ்வேறு சாதிகளுக்கும் வீட்டுபெயராகத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்களாய் உள்ளன.{{cn}}
 
 
==மதுரை நாயக்கர்களின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது