ஆறாம் அர்பன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
'''திருத்தந்தை ஆறாம் அர்பன்''' ({{lang-la|Urbanus VI}}; c. 1318 – 15 அக்டோபர் 1389), இயற்பெயர் '''பார்தலோமியோ பிரிகானோ''' ({{IPA-it|bartoloˈmɛːo priɲˈɲaːno}}), என்பவர் [[திருத்தந்தை]]யாக 8 ஏப்ரல் 1378 முதல் 1389இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். [[கர்தினால்]]கள் குழுவுக்கு வெளியே தேர்வான கடைசி திருத்தந்தை இவர் ஆவார்.
 
1363இல் ஆர்சென்சாவின் பேராயராகவும், 1377இல் பாரியின் பேராயராகவும் நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 8, 1378இல் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியின் இறப்புக்குப்பின்பு இத்தாலியர்கள் [[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்|அவிஞ்ஞோனுக்கு]] திருத்தந்தை மீண்டும் செல்லாதிருக்க ஒரு இத்தாலியரை தேர்வு செய்ய கலகம் செய்தனர். இதனால் இவர் திருத்தந்தையாக தேர்வானார்.
 
தேர்வானப்பின்பு இவர் கடுங்கோபக்காரராக மாறியதாலும், பலவற்றை மாற்ற முயன்றதாலும்,இவரைத்தேர்வு செய்த பல கர்தினால்கள், குறிப்பாக பிரெஞ்சுக்கர்தினால்களின் வெறுப்பை இவர் பெற்றார். இதனால் இவர் தேர்வான நான்கு மாதத்தின் 13 பிரெஞ்சுக்கர்தினால்கள் அங்கனி என்னும் இடத்தில் இவரின் தேர்வு இத்தாலியர்களின் மிரட்டலால் விளைந்தது என்று காரணம் கூறி அதை செல்லாது என அறிக்கையிட்டனர். பின்னர் ஃபான்டியில் செப்டம்பர் 20, 1378 அன்று ஜெனிவாவின் இராபர்டை புதிய திருத்தந்தையாக தேர்வு செய்தனர். இவர் [[எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்|ஏழாம் கிளமெண்ட்]] என்னும் பெயரை ஏற்றார். இதுவே 40 வருடங்கள் நிளவிய [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவின்]] காரணமாயிற்று.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆறாம்_அர்பன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது