உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
== உயிரியலின் வரலாறு ==
 
நவீன உயிரியல் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சி அடைந்து இருப்பினும் உயிரியலை உள்ளடக்கியதும் அதனுடன் தொடர்பானதுமான விஞ்ஞானம் ஆதி காலத்திலிருந்தே கற்கப்பட்டது. இயற்கை தத்துவம் மொசப்பத்தேமிய, எகிப்திய, [[சிந்துவெளி]] மற்றும் சீன நாகரிகங்களில் இருந்தே கற்கப்பட்டது. இருப்பினும், நவீன உயிரியல் மற்றும் இயற்கை ஆய்வு, அதன் அணுகுமுறை தோற்றம் என்பன பெரும்பாலும் பண்டைய கிரேக்க தத்துவங்களை ஒத்து காணப்படுகின்றன. அதேவேளை மருத்துவ முறையான கல்வி Hippocrates காலம் (கி.மு.460-கி.மு.370) வரை பின்னோக்கி செல்கிறது. [[அரிஸ்டாடில்]] உயிரியல் வளர்ச்சிக்கு மிக அதிகமாக பங்களித்தார்.
 
மத்திய இசுலாமிய உலக அறிஞர்களான al-Jahiz (781–869), Al-Dinawari (828–896) போன்றோர் தாவரவியல் பற்றியும் , Rhazes (865–925) உடற்கூறியல் மற்றும் உடலியங்கியல் பற்றியும் நூல்களை எழுதினர். குறிப்பாக கிரேக்க தத்துவஞானி மரபுகளை ஆய்வு செய்த இஸ்லாமிய அறிஞர்களால் மருத்துவம் சிறப்பாக கற்கப்பட்டது. ஆன்டன் வான் லியூவன்ஹூக் (Antony van Leeuwenhoek) நுண்ணோக்கியை[[நுண்ணோக்கி]]யை மேம்படுத்திய பின் உயிரியல் விரைவில் அபிவிருத்தியடைய மற்றும் வளர தொடங்கியது. இதன் பின்னரே விந்தணுக்கள், [[பாக்டீரியா]] போன்றவையும் நுணுக்குக்காட்டிக்குரிய அங்கிகளின் பாகுபாடும் கண்டுபிடிக்கப்பட்டன. நுண் நோக்கியியல் முன்னேற்றங்கள் உயிரியல் சிந்தனையில் மேலும் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியன.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உயிரியலாளர்கள் பலர் கலத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். 1838 மற்றும் 1839 இல், ச்செல்டியன் மற்றும் சுவான் பின்வரும் கருத்துக்களை ஊக்குவிக்க தொடங்கினர்.
1) உயிரினங்களின் அடிப்படை அலகு கலம் ஆகும்
2) தனிப்பட்ட கலங்களில் வாழ்வின் அனைத்து பண்புகள் உண்டு
3) அனைத்து கலங்கள் மற்ற கலங்களின் பிரிவில் இருந்தே வரும்
இவை பின்னர் கலக்கொள்கை ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டன .
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது