வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.<ref>சங்ககால அரச வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613005, பக்கம்-258</ref> அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
===தோற்றம்===
 
கண்ணபிரான் வழியினராகிய அரசரையும் வேளிரையும் தென்னாட்டிற் குடியேற்றினர்" என்பதே, நாம் இங்கு ஆராய்தற்குரியது. அகத்தியனார் தென்னாடுபுகுந்த வரலாற்றைப்பற்றிப் புராணங்களிற் சொல்லப்பட்டிருப்பதை ஒத்தே மேற்கூறிய செய்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளனவாயினும், கண்ணன்வழிவந்தோர் பலரை அம்முனிவர் தம்முடன் கொணர்ந்தாரென்பது அப்புராணங்களிற் கூறப்பட்டிருப்பதாக இப்போது தெரியக்கூடவில்லை. எனினும், இச்செய்தியே, "வேந்துவினையியற்கை" என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும்-"இது, மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்* வேந்தன் தொழில் உரித்தென்கின்றது" (பொருளதி - 32) என, மற்றும் ஒருமுறை எடுத்தோதி வற்புறுத்தப்பட்டுளது.
 
இப்பிற்கூற்றிலே, முன்குறித்த தொடரிற்கண்ட அருவாளரை யொழித்து, ஒழிந்த நரபதியருடன் கூடிய வேளிரே கண்ணன் வழியினரெனவும், அவர் பதினெண்வகைக் குடியினராயிருந்தனர் எனவும்,† அவரெல்லாம் அரசுரிமை எய்தற்குரியவரெனவும் குறிக்கப் படுதல் காணலாம். இவ்வாறு, வேளிரைப்பற்றிய வரலாற்றை நச்சினார்க்கினியர் ஒருமுறைக்கு இருமுறை எழுதுதலால், அஃது எதோ ஒரு பிரமாணம்பற்றியே அவர்காலத்து வழங்கியிருத்தல் வேண்டு
 
* ஸ்ரீவியாஸபாரதம், ஸபாபர்வம், 14-ம் அத்யாயத்தில், ஜராஸந்தன் விஷயமாகக் கண்ணபிரான் யுதிஷ்டரருக்குக் கூறிவருமிடத்து -- "ராஜாவே! ஜராஸந்தன் எதிர்த்தலாற் கரைகடந்த பயம் எங்கட்கு நேர்ந்தபோது, நாங்கள் பதினெண் குலத்தோர்கள் சேர்ந்து இவ்வாலோசனை செய்தோம்" என்று, இரு முறை குறிப்பிடுதலால், யாதவர் பதினெண்வகைக் குடியினராயிருந்தமை தெளிவாகின்றது. (ஸ்ரீ ம.வீ. இராமனுஜாசாரியரவர்கள் பதிப்பித்துவரும் வியாஸபாரதம் தமிழ்பொழிபெயர்ப்புப் பார்க்க.) ஸ்ரீமத் பாகவதத்தில், இவர்கள் ஐந்து குலமாகவும், 101-கிளைகளாகவும் கூறப்படுவர். (தசமஸ்கந்தம்; அத்-1, 10)
† முன்குறித்த வாக்யத்தில், 'அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்' என வேறுவேறாகக் குறிக்கப்பட்டிருப்பினும், இவ் வாக்யத்தில் 'நரபதிய ருடன்கொணர்ந்த 18-குடிவேளிர்' என வருவதனால், அந்நரபதிகள் வேளிருடைய தலைவர்களே என்பது பெறப்படுகின்றது. வேளிர் பதினென்வகையினரானமைக்கேற்ப, அவரரசரும் பதினெண்மராயினர் போலும்.
 
---------
page 5
 
மென்று தெரிகிறது. ஆனால், அவ்வுரைகாரர் தாமெழுதியவற்றுக்குக் காரணமாயிருந்த மேற்கோளை எடுத்துக்காட்டினாரில்லை. இச்செய்திகளைப் பிரமாணத்தாலன்றிப் பிற்காலத்தொருவர் கூற்றால் மட்டும் நம்பி மேற்சொல்லுதல், சரித்திரவுண்மை யறிவதற்குப் போதாததாம். மேலும், துவாரகையாண்ட கண்ணன்வழியினர் இவ்வேளிரெனின், அது புதியசெய்தியன்றோ. ஆதலால், நச்சினார்க்கினியர் எழுதியவற்றை அடியாகக்கொண்டு, அவற்றி னுண்மையை விளக்கவல்ல வேறு சாதனங்கள் உளவா என்பதை இனி, ஆராய்ச்சி செய்வோம்.
 
நச்சினார்கிகினியர் எழுத்தின்படி, வேளிரென்பவர் கண்ணன் வழியினராயின், அவரை நாம் யாதவர் என்றே அழைக்கலாம்: என்னெனின்-- அப்பெருமான் அவதரித்தது யதுவமிசத்திலென்பது* பிரசித்தமன்றோ. இனி, இவ்வேளிர் துவாரகையினின்று தென்னாடு புகுந்த பழைய யாதவராயின், அன்னோர்வரலாறு பண்டைத் தமிழ் நூல்களிற் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இவர்கள் கண்ணன் காலத்தை அடுத்துத் தெற்கே வந்தேறியவராக நச்சினார்க்கினியர் கூறுதலின், அவர்கள் செய்தியை நன்குவிளக்கக்கூடிய அக்காலத்து நூல்கள் இறந்தனபோலும்; எனினும், பிற்பட்ட கடைச்சங்கச் செய்யுளில், இவ்வேளிர் வராற்றைக் குறிப்பிக்கக்கூடிய இரண்டொரு செய்திகளும் இல்லாமற்போகவில்லை. கடைச்சங்கத்தவராகிய கபிலர் என்ற புலவர்பெருமான் இருங்கோவேள் என்ற சிற்றரசனை நேரில் அழைக்குமிடத்தில்:-
 
* " யது என்பான், பாண்டவரின் மூதாதைகளில் ஒருவனாகிய யயாதிக்குத் தேவயானை வயிற்றில் உதித்த புத்திரன். இவன்வம்சம் பல்கிப் பலகிளைகளாகி அநேக பிரசித்திபெற்ற ராஜர்களைத் தந்தது. யதுவின் மூத்தகுமாரனாகிய ஸகஸ்ரஜித்தினாலே ஹேஹயவமிசமாயிற்று. அவ்வம்சத்திலே கார்த்த வீர்யார்ச்சுனன் என்ற பிரசித்திபெற்ற அரசன் தோன்றினான். அவன் சந்ததியிலே தாளஜங்கர்கள் தோன்றி விளங்கினர். யதுவின் இரண்டாம்புத்திரனாகிய குரோஷ்டுஷ வம்சத்திலே பிரசித்திபெற்றவர்கள்--சசிபிந்து, சியாமகன், விதர்ப்பன் என்பவர்கள். இவருள் விதர்ப்பனால் விதர்ப்பராஜவம்சம் வந்தது. விதர்ப்பன் மூன்றாம்புத்திரனாலே சேதிவமிசம் வந்தது. இரண்டாம் புத்திரன் வமிசத்தவனாகிய சாத்வதனால் போஜவமிசமும், அந்தகவமிசமும், விருஷ்ணிகவமிசமும் வந்தன. இவற்றுள், விருஷ்ணிக வமிசத்திலேதான் கண்ணபிரான் அவதரித்தது.--அபிதானகோசம், யது என்ற தலைப்பின்கீழ்க் காண்க.
 
------------
page 6
 
"நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே"
 
எனக் கூறியிருக்கும் அடிகள் புறநானூற்றில் (201) காணப்படுகின்றன. இதன்பொருள்:- நீதான், வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை-என்பதாம். இப்பழைய மேற்கோளால், வேளிரென்பார் துவாரகையினின்றுவந்து தென்னாடாண்ட சிற்றரச வகுப்பினர் என்பதுமட்டில் நன்கு விளங்கிற்று; விளங்கவே, மேற்கூறிப்போந்த நச்சினார்க்கினியர் செய்திகளிலே, சிறந்த தொன்றற்குப் பிரபல ஆதாரங் காணப்பட்டதாம்.
 
இனி, வேளிர் துவாரகையினின்று வந்தேறியவர் என்பதற்கு இலக்கியமுள்ளதாயினும், அவர் யாதவகுலத்தவரென்பதை விளக்கவல்ல பிரமாணங்களை முன்னூல்களினின்று அறிதல் இப்போது அரிதாம். ஆயினும், யது வமிசத்தோர் ஆதியிற் கங்கைபாயுந் தேசங்களிற் பல்கிப் பெருகியகாலத்தே, அன்னோர் பகைவர்களாற்* றுன்பமுறாது வாழ்தல்வேண்டி, அக்குலத் தலைவராகிய கண்ணபிரான், மேல்கடற்பக்கத்தே துவாரகையைப் புதிதாக நிருமித்து, அதனைச் சூழ்ந்து கிடந்த காட்டுப் பிரதேசங்களைத் திருத்தி நாடுகளாக்கி எண்ணிறந்த யாதவர்களை ஆங்குக் குடியேற்றித் தாம் அவர்கட்கு இரக்‌ஷகராக நின்று உதவி வந்தனர் - என்ற செய்தி புராணேதிகாசங்களிற் கேட்கப்படுகின்றது. கண்ணபிரான் தன்னடிச்சோதிக்கு+ எழுந்தருளுங் காலத்தே, இவ் யாதவரிற் பலர் தமக்குள் விளைந்த பெருங்
 
* ஜராஸந்தன் முதலியோர்.
+ பரமபதம்.
 
------------
page 7
 
கலகத்தாற் போர்புரிந்து மாணடனரென்பதும், அக்காலத்துப் பலர் அவ்விடத்தைவிட்டு வெளியேறினர் என்பதும், அங்ஙனம் வெளியேறியவர் கோதாவரியின் தென்கரைப் பக்கங்களிலும் பரவலாயினர் என்பதும் இதிகாசங்களால் அறியப்படுகின்றன.
இச் செய்திகளால், யாதவ குலத்தார்க்குப் பலதேசங்களிலும் அடுத்தடுத்துக் குடியேறும்படி நேர்ந்துவந்ததென்றும், அம்முறையில், அன்னோர் முதலிற் கங்கை பாயும் நாடுகளினின்று மேல்கடலோரங் குடியேறிக் காலாந் தரத்தில் மஹாராஷ்டிரமெனவழங்கும் தேசமுழுதும் பரவியிருந்தனரென்றும் விளங்கலாம். இவ்வாறாயின், அவ்யாதவர்கள் தாம் பரவியிருந்த நாட்டுக்குந் தெற்கணிருந்த தமிழகத்துக் காடுகளைத் திருத்தி, ஆண்டும் குடியேறினர் என்று கொள்வதிற் புதுமை யொன்றுமில்லை என்க. யாதவர் தெற்கே வந்ததைப்பற்றிய நச்சினார்க்கினியர் எழுத்துக்களை முழுதும் ஆதரிக்கக் கூடிய பிரமாணம் இப்போது கிடைப்பதரிதேனும், அவற்றைக் குறிப்பிக்கக் கூடிய பிரமாணமும் இல்லாமற் போகவில்லை என்பதை இதனால் அறியலாம். யாதவர் தென்னாட்டுங் குடியேறினர் என்ற இவ்வூகத்துக்குப் பிரசித்தரான சரித்திராசிரியர் ஒருவரும் சம்மதமளித்தல் கவனிக்கத்தக்கது:
ஸ்ரீரோமேச சந்த்ர தத்தர் எழுதிய "பழைய இந்திய நாகரீகம்" என்ற அரியநூலின் முதற்றொகுதியில்* யாதவரைப்பற்றி எழுதப் பட்டிருப்பதாவது:-"கண்ணனைத் தலைமையாகக்கொண்ட யாதவர்கள் (வட) மதுரையைவிட்டு நீங்கிக் கூர்ச்சரத்துள்ள துவாரகையிற் குடியேறினார்கள். அங்கே அவர்கள் அதிககாலம் தங்கவில்லை. அவர்கள் தங்கட்குள்ளே பெருங்கலகம் விளைக்க, (அவருட்பலர்) துவாரகையை நீங்கிக் கடல்வழியே பிரயாணித்தனர். அங்ஙனம் பிரயாணித்தவர்கள் தென்னிந்தியாவை அடைந்து ஆங்குப் புதுராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகிறது" என்பதே. இவ்வாறு தத்தரவர்கள் எழுதுவது நச்சினார்க்கினியர் எழுதிய வேளிர் வரலாற்றோடு சில அமிசங்களில் ஒத்திருக்கின்றமை காணலாம். "வேளிர் யாதவரே" எனக்கண்டு தமிழறிஞர் ஆங்கிலத்தில் வியாசமெழுத, அதனை நோக்கி "யாதவர் தென்னிந்தியாவில் ராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகின்றது"
-
* Dutt's Civilization in Ancient India: Part I, page 210.
===பாண்டிநாட்டு வேளிர்கள்===
#[[ஆய்]] ஆண்டிரன்
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது