ஐவன் ஈலிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
வரிசை 53:
== கல்விச் சிந்தனைகள் ==
 
கல்வியின் எதிர்மறைத் தாக்கங்கள் தொடர்பான ஈலிச்சின் கருத்தாடல்கள் சமூகத்தால் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கப்பட்டன. 1977ஆம் ஆண்டு வெளியான "பள்ளிக் கலைப்பு சமூகம்" (Deschooling Society) எனும் அவரது நூல், கல்வி தொடர்பான மீள்சிந்தனைக்கு அடிப்படையானது. இதில் கல்வியை நவீன பொருண்மியத்துடன் தொடர்புபடுத்தி திறனாய்வு அடிப்படையில்; நோக்குகின்றார். அத்துடன் கல்வியிலுள்ள வினைத்திறனின்மை பற்றியும் சுயதேடலுடன் உள்ள கல்வியின் மேன்மை பற்றியும் அவர் ஆராய்கின்றார். பாடசாலைகளின் எதிர்மறைத் தாக்கங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் கற்றௌர்கற்றோர் மற்றும் எதிர்க்கருத்துக்கள் கொண்டோர் மத்தியில் வெகுவாகப் பரவியது; பள்ளிக் கல்வியைப் பெறாதோரின் கரிசனைக்கும் அது உள்ளானது.
 
ஈலிச்சின் பள்ளிக்கலைப்பு சமூகச் சிந்தனையைப் பற்றி நாம் தெளிவாக நோக்க வேண்டும். பள்ளிக்கலைப்பு என்பது அவற்றை முற்றாக ஒழித்துவிடுவதில்லை, மாறாக அவற்றின் நிறுவனக் கட்டமைப்பினைச் சிதைப்பதையே வற்புறுத்துகின்றது. இது அவரது சமூகம் பற்றிய சமத்துவ சிந்தனைப்போக்கினைக் காட்டுகின்றது. பொது நிதியீட்டங்கள் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்படுவதை ஈலிச் முற்றாக எதிர்த்தார். பாடசாலைகள் ஆடம்பரப் பொருளொன்றாக இனங்காணப்படுமிடத்து பள்ளிக் கல்வியைப் பெறாதவர்கள் கவலையடைய மாட்டார்கள் என்பது இவரது வாதமாகும். அரச கட்டமைப்பினுள் பாடசாலைகள் செயற்படுவது மாணவHகளின்மாணவர்களின் அறியாமையை இன்னும் அதிகரிக்குமே தவிர பரந்துபட்ட அறிவை விருத்தியாக்க உதவாது எனக் கருதினார். இது அவர் நிறுவனங்களை மிகவும் நுட்பமான முறையில் கூறுபோட்டு ஆராய்ந்ததன் பயனாக எழுந்நஎழுந்த சிந்தனையாகும். பள்ளிக்கலைப்பு சமூகத்தின் சாத்தியப்பாடுகள் பற்றி தனது Tools for Conviviality(1973) எனும் நூலிலே மேலதிக விளக்கத்தைத் தந்துள்ளார்.
 
கல்வித் தரத்தை முன்னேற்றவேண்டுமாயின் அதனைக் கட்டுப்படுத்தாது சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலமே யதாHத்தமானயதார்த்தமான கல்வி முன்னெடுக்கப்படும். கற்றல் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் அமைய வேண்டுமாயின் கற்போன் கட்டுப்பாடுகளுக்கு உட்படக்கூடாது என்பதும் பள்ளிக் கலைப்பு சமூகத்தின் அடிப்படைக் கருத்தாகும்.
 
ஐவன் ஈலிச் பள்ளிக் கூடங்களை மட்டுமன்றி வேறு நிறுவனங்களையும் மிகக்கடுமையாக விமர்சனஞ் செய்தார். நிறுவனங்களும் தொழில் வாண்மையாளர்களும் எவ்வாறு மனிதப்பண்புகளுக்கு முரணாக நடந்துகொள்கின்றார்கள் என்பதன் மீது தனது கவனக்குவிப்பை செலுத்தினார். நிறுவனங்கள் மனிதர்களின் தன்னம்பிக்கையினைக் குறைத்து, அவர்களைக் கீழ்மைப்படுத்தி, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலை அழித்துவிடுகின்றதென்பது அவரது கருத்தாகும். வைத்திய நிறுவனங்கள் உடல் நலத்திற்குரிய பாரிய அச்சுறுத்தலாகும். நவீன மருத்துவம் மக்களுக்கு நன்மையைவிட தீமையையே செய்கின்றது என்பதும் இவரது அவதானிப்பாகும். நிறுவனங்கள் மகிழ்ச்சிகரமான செயற்பாட்டுத்தன்மை கொண்டதாக விளங்க வேண்டும். தன்னிச்சையான, உருவாக்கும் தன்மையான, சூழலுடன் இணைந்த தன்மையான பண்புகள் நிறுவனங்களிடம் காணப்பட வேண்டும். இவை நிறுவனம் ஒன்றின் இன்றியமையாத பண்புகளாக அவரால் அடையாளங் காணப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/ஐவன்_ஈலிச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது