நானமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
ஆண் கஸ்தூரி மானின் வயிற்றின் அடிப் பாகத்தில் தனிச் சிறப்புடைய ஒரு பை உறுப்பு உள்ளது. அப்பையில் வாசனை நீர்ப் பொருள் சுரக்கிறது. அதுவே கஸ்தூரி யாகும். இந்தக் கஸ்தூரியைச் சுரப்பதால், இது கஸ்தூரி மான் என்ற பெயரைப் பெற்றது.
 
கஸ்தூரி என்பது நறு மணம் வீசும் பொருள். இது சிவப்பும், பழுப்பும் கலந்த நிறம் கொண்டது. மனிதர்கள் இப்பொருளுக்காக கஸ்தூரி மானைக் கொல்வார்கள். கஸ்துரி சுரப்பியைத் தனியாகப் பிரித்தெடுத்து அதை உலர வைப்பார்கள். உலர்ந்த பின் இதிலிருந்த நீர்ப்பொருள் வற்றி, சிறு சிறு மணல் போன்ற வடிவம் பெறும். கஸ்தூரிப் பொருளில் ஐந்து வகை உள்ளன என்றும், அவை, கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என்றும் [[தமிழ்]] லெக்சிகன் அகராதி அறிவிக் கின்றது.
 
==கஸ்தூரியின் பயன்கள்==
கஸ்தூரியைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் சன்னி போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்தில் பயன்படுத்தப்படுவதாக [[அபிதான சிந்தாமணி]] என்ற தமிழ்க் கலைக்களஞ்சியம் கூறுகிறது. பாம்புக் கடி நஞ்சைப் போக்கும் மருந்து தயாரிப்பதிலும் இதன் பங்கு உள்ளது. கஸ்தூரி மாத்திரை என்ற சித்தமருத்துவ மருந்துகளில் இதன் பெயர் இடம் பெற்றுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நானமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது