"அந்தியோக்கியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up)
 
உரோமைப் பேரரசன் ஜூலியன் கி.பி. 362இல் அந்தியோக்கியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஒரு புலம்பல் விழா நடந்துகொண்டிருந்தது. அதை ஜூலியன் விரும்பவில்லை. அதுபோலவே கிறித்தவர்களும் ஜுலியன் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக உணர்ந்தார்கள். யூதர்களின் சமயச் சடங்குகள் மற்றும் புராதன சமயத்தின் சடங்குகள் ஆகியவற்றை ஆதரித்த ஜூலியன் அந்தியோக்கியாவில் இருந்த கிறித்தவப் பெருங்கோவிலை மூடியது கிறித்தவர் நடுவே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது தவிர, ஜூலியனின் இராணுவத்தினர் புராதன சமயத்தைச் சார்ந்த கோவிலில் பலிகொடுக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு, மதுவருந்தி நகரத் தெருக்களில் தொந்தரவு கொடுத்தனர்; அதே நேரத்தில் நகர மக்கள் பசியால் வாடினர். எனவே மக்கள் ஜூலியனை வெறுத்தனர். அவரது தாடி பற்றிக் கேலிச் சித்திரங்களும் வெளியாயின.
 
526இல் நிகழ்ந்த பயங்கர [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தின்போது]] அந்தியோக்கியாவும் அதன் துறைமுக நகரான செலூக்கியாவும் பெரும் அழிவைச் சந்தித்தன. [[முதலாம் ஜஸ்டீனியன்]] மன்னன் அந்தியோக்கியாவுக்குக் "கடவுளின் நகர்" என்று பொருள்படும் "தியோப்பொலிஸ்" (Theopolis) என்னும் பெயரைக் கொடுத்தார். அவர் காலத்தில் பல கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன. கி.பி. 531இலிருந்து 579 வரை ஆட்சிசெய்த முதலாம் கொஸ்ரோ (Khosrau I) அந்தியோக்கியாவைத் தாக்கியதோடு அங்கு வாழ்ந்த சுமார் 3 இலட்சம் மக்களைக் கொன்றார். அந்தியோக்கியாவின் புகழும் மங்கத் தொடங்கியது.
{{விவிலிய இடங்கள்}}
 
236

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1636040" இருந்து மீள்விக்கப்பட்டது