வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.<ref>சங்ககால அரச வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613005, பக்கம்-258</ref> அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
===தோற்றம்===
செந்தமிழ் வளர்த்த பெருமையிற் சேர சோழ பாண்டியர்க்கு எவ்வளவு பாகமுண்டோ, அதற்கு அதிகமில்லாமற்போயினும், அவரளவு சமபாகம் பெற்றுநின்ற ஒரு பெருங்கூட்டத்தார் முற்காலத்தே தமிழ்நாட்டில் விளங்கியிருந்தனர் எனின், அது சிலர்க்கு வியப்பாகத் தோற்றலாம். ஆனால் பழைய நூலாராய்ச்சியுடைய செந்தமிழறிஞர்க்கு அது சிறிதும் வியப்பன்று. பண்டையிலக்கியங்களை ஆராயுமிடத்து, மூவேந்தர் படைத்த தமிழ்ப்பெருமையளவு தாமும் படைத்து நின்ற ஒரு கூட்டத்தார் தமிழகத்தே விளக்கமுற்றிருந்த செய்தி வெளியாகும். இன்னோர் தாம் வேளிர் என்றழைக்கப்படுவார்கள். இரவாமலீந்த கடையேழுவள்ளல்களிற் பலர் இவர்களே. “கொடுக்கிலா தானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை” என்னும் திருவாக்கில், வள்ளன்மைக்கே ஓரெல்லையாக வைத்துப் பாராட்டப் பெற்றவன் இவருள் ஒருவனேயாவன். வரையாவண்மையால் தானடைந்த ஒப்பற்ற புகழைக்கண்டு மூவேந்தரும்$ அழுக்காறு கொள்ளும்படி நின்ற இப்பெருவள்ளல் விளங்கியது வேளிர் குலமெனின், அதற்கு வேறொரு பெருமையும் வேண்டுமோ?
 
யது வமிசத்தோர் ஆதியிற் கங்கைபாயுந் தேசங்களிற் பல்கிப் பெருகியகாலத்தே, அன்னோர் பகைவர்களாற்*றுன்பமுறாது வாழ்தல்வேண்டி, அக்குலத் தலைவராகிய கண்ணபிரான், மேல்கடற்பக்கத்தே துவாரகையைப் புதிதாக நிருமித்து, அதனைச் சூழ்ந்து கிடந்த காட்டுப் பிரதேசங்களைத் திருத்தி நாடுகளாக்கி எண்ணிறந்த யாதவர்களை ஆங்குக் குடியேற்றித் தாம் அவர்கட்கு இரக்‌ஷகராக நின்று உதவி வந்தனர் - என்ற செய்தி புராணேதிகாசங்களிற் கேட்கப்படுகின்றது. கண்ணபிரான் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளுங்காலத்தே, இவ் யாதவரிற் பலர் தமக்குள் விளைந்த பெருங்கலகத்தாற் போர்புரிந்து மாணடனரென்பதும், அக்காலத்துப் பலர் அவ்விடத்தைவிட்டு வெளியேறினர் என்பதும், அங்ஙனம் வெளியேறியவர் கோதாவரியின் தென்கரைப் பக்கங்களிலும் பரவலாயினர் என்பதும் இதிகாசங்களால் அறியப்படுகின்றன.
இச் செய்திகளால், யாதவ குலத்தார்க்குப் பலதேசங்களிலும் அடுத்தடுத்துக் குடியேறும்படி நேர்ந்துவந்ததென்றும், அம்முறையில், அன்னோர் முதலிற் கங்கை பாயும் நாடுகளினின்று மேல்கடலோரங் குடியேறிக் காலாந்தரத்தில் மஹாராஷ்டிரமெனவழங்கும் தேசமுழுதும் பரவியிருந்தனரென்றும் விளங்கலாம். இவ்வாறாயின், அவ்யாதவர்கள் தாம் பரவியிருந்த நாட்டுக்குந் தெற்கணிருந்த தமிழகத்துக் காடுகளைத் திருத்தி, ஆண்டும் குடியேறினர் என்று கொள்வதிற் புதுமை யொன்றுமில்லை என்க. யாதவர் தெற்கே வந்ததைப்பற்றிய நச்சினார்க்கினியர் எழுத்துக்களை முழுதும் ஆதரிக்கக் கூடிய பிரமாணம் இப்போது கிடைப்பதரிதேனும், அவற்றைக் குறிப்பிக்கக் கூடிய பிரமாணமும் இல்லாமற் போகவில்லை என்பதை இதனால் அறியலாம். யாதவர் தென்னாட்டுங் குடியேறினர் என்ற இவ்வூகத்துக்குப் பிரசித்தரான சரித்திராசிரியர் ஒருவரும் சம்மதமளித்தல் கவனிக்கத்தக்கது:
ஸ்ரீரோமேச சந்த்ர தத்தர் எழுதிய "பழைய இந்திய நாகரீகம்" என்ற அரியநூலின் முதற்றொகுதியில்* யாதவரைப்பற்றி எழுதப் பட்டிருப்பதாவது:-"கண்ணனைத் தலைமையாகக்கொண்ட யாதவர்கள் (வட) மதுரையைவிட்டு நீங்கிக் கூர்ச்சரத்துள்ள துவாரகையிற் குடியேறினார்கள். அங்கே அவர்கள் அதிககாலம் தங்கவில்லை. அவர்கள் தங்கட்குள்ளே பெருங்கலகம் விளைக்க, (அவருட்பலர்) துவாரகையை நீங்கிக் கடல்வழியே பிரயாணித்தனர். அங்ஙனம் பிரயாணித்தவர்கள் தென்னிந்தியாவை அடைந்து ஆங்குப் புதுராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகிறது" என்பதே. இவ்வாறு தத்தரவர்கள் எழுதுவது நச்சினார்க்கினியர் எழுதிய வேளிர் வரலாற்றோடு சில அமிசங்களில் ஒத்திருக்கின்றமை காணலாம். "வேளிர் யாதவரே" எனக்கண்டு தமிழறிஞர் ஆங்கிலத்தில் வியாசமெழுத, அதனை நோக்கி "யாதவர் தென்னிந்தியாவில் ராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகின்றது"
வேளியராகிய யாதவர் தம் பழைய மதிப்பைக் காலாந்தரத்தே இழந்ததில் வியப்பில்லையாம்*. ஆயினும், இவர்களுடன் பிறந்த வீரத்தன்மையும் உறுதிப்பாடும் எக்காலத்தும் இவர்களைக் கைவிட்டொழிந்தில.
 
கண்ணபிரான் வழியினராகிய அரசரையும் வேளிரையும் தென்னாட்டில் குடியேற்றினர்" என்பதே, நாம் இங்கு ஆராய்தற்குரியது. அகத்தியனார் தென்னாடுபுகுந்த வரலாற்றைப்பற்றிப் புராணங்களிற் சொல்லப்பட்டிருப்பதை ஒத்தே மேற்கூறிய செய்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளனவாயினும், கண்ணன்வழிவந்தோர் பலரை அம்முனிவர் தம்முடன் கொணர்ந்தாரென்பது அப்புராணங்களிற் கூறப்பட்டிருப்பதாக இப்போது தெரியக்கூடவில்லை. எனினும், இச்செய்தியே, "வேந்துவினையியற்கை" என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும்-"இது, மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்* வேந்தன் தொழில் உரித்தென்கின்றது" (பொருளதி - 32) என, மற்றும் ஒருமுறை எடுத்தோதி வற்புறுத்தப்பட்டுளது.
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது